Devotion to St. Antony in Tamil Day 12

பூர்ஜ் (Bourges} பட்டணத்தில் நடந்த நிகழ்ச்சிகள்

1225-ம் வருஷ முடிவில் நவம்பர் மாதத்தில் பூர்ஜ் பட்டணத்தில் கூடின சங்கத்துக்கு அர்ச். அந்தோனியார் அனுப்பப்பட்டார், அவ்விடத்தில் அவர் ஒருவரையும் அறியாதிருந்தபோதிலும், அந்தப் பட்டணத்து மேற்றிராணியார் பிரிவினைக்காரருக்குச் செவி கொடுத்து விசுவாச சத்தியங்களில் தத்தளித்து, செய்யவேண்டிய கடமைகளை நிறைவேற்றாதிருந்தார் என்று அர்ச்சியசிஷ்டவர் காட்சியினால் அறிந்திருந்தார். ஆனதால் தைரியத்தோடு மேற்றிராணியாரிடத்தில் போய் அவரை நோக்கி: “மேற்றிராணி மகுடந் தரித்தவரே, உம்மிடத்தில் பேசுவதற்காகத்தான் நான் வந்தேன் என்று சொல்லி, அந்த மேற்றிராணியாருடைய இரகசிய குற்றங்களையும், அவர் ஏற்று அநுசரித்து வந்த தப்பறையான கொள்கைகளையும் வெளிப்படுத்தி சுவிசேஷ வாக்கியங்களை எடுத்துரைத்து எவ்வளவு உருக்கமாய்ப் பேசினாரென்றால், மேற்றிராணியார் தன் குற்றங்களைக் கண்டுபிடித்து அவைகளுக்காக மனஸ்தாபக் கண்ணீர் விட்டழுது, சங்கம் முடிந்த பிறகு, அந்தோனியாரைத் தனியே வரவழைத்து மகா தாழ்ச்சியோடு தன் குற்றங்களை வெளிப்படுத்திப் பொறுத்தல் கேட்டார், அது முதல் மேற்றிராணியார் தேவ ஊழியத்தில் பிராமாணிக்கந் தவறாது நடந்து, ஞான முயற்சிகளில் தன் சீவியகாலமெல்லாம் செலவழித்தார்.

      தாம் செய்துவந்த பிரசங்கங்களினால் உண்டான நன்மை பிரயோசனங்களை வியர்த்தமாக்கப் பசாசு பலவிதத்திலும் முயலுவதை அர்ச்சியசிஷ்டவர் அறிந்திருந்தார். ஒரு நாள் திராளான சனங்களுக்கு முன்பாக அவர் பிரசங்கம் செய்த

போது , ஒரு துரைமகள் வெகு கவனமாய் அவர் சொல்லும் அர்தமான வாக்கியங்களைக் கேட்டுக்கொண்டிருக்கையில் காய்மகாரம் பிடித்த பசாசு அவள் கவனத்தைக் கெடுக்க எண்ணி ஒரு மனித வேஷமெடுத்து அவள் கண்களுக்கு முன்பாகத் தோன்றி, கையில் கடிதமொன்றை காட்டி அளுடைய மகன் யுத்தத்தில் எதிரிகள் கையில் அகப்பட்டு அவர்களால் கொலை செய்யப்பட்டான் என்று அறிவித்தது.பசாசு செய்த தந்திர உபாயத்தை அந்தோனியார் காட்சியால் அரிந்து சனங்கள் எல்லோரும் கேட்க உரத்த சத்தமாய்: ‘”சகோதரியே, நீ பயப்படாதே உன் மகன் உயிரோடிருக்கிறாள், (சௌக்கியமாக இருக்கிறான். இந்தத் ஆளோ, பசாசு’ என்றார். அவர் அப்படிச் சொல்லவே அவன் புகையைப்போல மறைந்து போனான்.

அர்ச்சியசிஷ்டவர் செய்துவந்த நன்மைகளைக் கண்ட பேய்கள் கோபங்கொண்டு அவருக்கு நானாவிதத்திலும் விக்கினங்கள் பண்ண முற்பட்டன. லிமோஜ் (Limoges) பட்டணத்தில் ஒருநாள், சன மிகுதியால் வேறு தகுந்த இடம் ஒன்றுமில்லாதிருக்க மைதானத்தில் அவர் பிரசங்கம் பண்ண வேண்டியிருந்த போது, அந்தப் பட்டணத்து மேற்றிராணியாராரும், குருப்பிரசாதிகளும் சனங்களை ஒரு விஸ்தாரமான மைதானத்திற் கூட்டி வந்தார்கள். மேடையின்மேலேறி அந்தோனியார் பிரசங்கந் துவக்கினபோது தெளிவாயிருந்த வானத்தைத் திடீரென மேகங்கள் அடர்ந்து இடியும், மின்னலும், குமுறலும் உண்டானதைக்கண்ட மக்கள் அச்சங் கொண்டு ஓடிப்போக எத்தனிக்கையில், அர்ச்சியசிஷ்டவர் அவர்களை நோக்கி: “ஒருவரும் போக வேண்டாம். மழையைப் பற்றி நீங்கள் பயப்பட வேண்டியதில்லை . எவரையும் மோசம் பண்ணாத சர்வேசுரன் மட்டில் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். உங்கள் மேல் ஒரு துளித் தண்ணீர் முதலாய் விழாதென்று உங்களுக்கு உறுதியாய்ச் சொல்லுகிறேன்’ என்றார். அவர் சொன்ன பிரகாரமே ஒரு துளி முதலாய் அவர்கள்மேல் விழாதிருக்க, சுற்றிலும் நல்ல மழை பெய்து வெள்ளம் ஓடக் கண்ட சனங்கள் சர்வேசுரனையும் அந்தோனியாரையும் வாழ்த்தினார்கள்.

மற்றொருநாள் அந்தோனியார் ஒரு கோயிலில் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தபோது, அந்தப் பிரசங்கத்தைக் கெடுக்க, பசாசு பைத்தியக்காரன் ஒருவனை ஏவி விடவே, அவன் அங்குமிங்குந் திரிந்து ஓடி, உரத்த சத்தமாய்ப் பேசி வெகு அலங்கோலம் உண்டு பண்ணினான். அந்தோனியார் அவனை சத்தம் செய்யாதிருக்கும்படி சொன்னார். அப்போது அவன் அவர் இடையிற் கட்டியிருந்த கயிற்றைக் கொடுத்தால் மாத்திரந்தான் அமரிக்கையாயிருப்பதாகச் சொன்னான். அந்தோனியார் தம் இடையில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துக் கொடுக்கப் பைத்தியக்காரன் அதை முத்தமிட்டு தன் நெஞ்சில் அணைக்கவே அவனுடைய பைத்தியம் தெளிந்தது. அவன் அவர் பாதத்தில் விழுந்து தனக்குச் . செளக்கியங் கட்டளையிட்ட கடவுளை வாழ்த்தினான். , தின்மை, செய்யத் தேடின பசாசு நன்மை விளைந்தது கண்டு * வெட்கி ஓடிப்போயிற்று.

-.-.-நமது சீவியகாலமெல்லாம் பசாசு நம்மைத் தன்னுடைய தந்திரங்களுக்கு உட்படுத்துவதற்குத் தேடுகின்றது. ஆனால் சங்கிலியினால் கட்டப்பட்ட நாயைப்போல இருக்கிற படியால், சர்வேசுரனுடைய உத்தரவன்னியில் நமக்குத் தின்மைசெய்யப் பசாசுக்கு வல்லமை இல்லை. ஆனதால் விழித்திருந்து செபம் பண்ணுவோம், அப்போது பசாசின் தந்திரத்துக்கு உள்ளாகமாட்டோம்,

செபம்

அர்ச், அந்தோனியாரே, சகலவித ஆபத்துக்களிலுமிருந்து எங்களைக் காப்பாற்றும்படி உம்மை மன்றாடுகிறோம். நீர் சேசுநாதர் இருதயத்தினிடத்தில் சலுகையுள்ள வராகையால் எங்கள் ஆத்தும் ஆபத்துக்களிலும், சரீர ஆபத்துக்களிலும் எங்களைக் காப்பாற்றத் தயைபபுரியும் காணப்படும் சத்துருக்கள், காணப்படாத சத்துருக்கள், இடி பெருங்காற்று, வெள்ளம், பூமி யதிர்ச்சி, இவை முதலிய ஆபத்துக்களிலிருந்து எங்களைக் காப்பாற்றி, சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கமாய் தாங்கள் வாழியஞ்செய்து நித்திய மோக்ஷானந்தம் சேரும்படி எங்களுக்காக மன்றாடியருளும், – ஆமென்.

நற்கிரியைதரித்திரருக்கு உதவி செய்கிறது.

மனவல்லயச் செபம்பசாசுகளுக்குப் பயங்கரமான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Leave a comment