Devotion to St. Antony in Tamil (Day 9)

ஒன்பதாம் நாள்

பிரஞ்சுராச்சியத்தில் அர்ச். அந்தோணியார் நடத்தின காரியங்கள் 

   பக்திச் சுவாலகருக்கொப்பான அர்ச், பிராஸ்சிஸ்கு அசிசியார் தம்முடைய பக்தியுள்ள தாயார் பிக்கா  அம்மாள் (Pica) பிரோவான்ஸ் (Provence) நாட்டிற் பிறந்ததினிமித்தம் பிரஞ்சு தேசத்தின்மட்டில் எப்போதும் விசேஷப்பிரியப் பற்றுதலாயிருந்தார். ஆனதினால் அவர் தம்முடைய சபையில் சேர்ந்த சந்நியாசி குருக்கள் வேதம் போதிக்க ஏற்பட்டபோது அவர்களை மற்றப் பிரதேசங்களுக்கு அனுப்பிவிட்டுத் தாம் பிரஞ்சு தேசத்தைத் தெரிந்து கொண்டு, அவ்விடம் மஸ்ஸேயோ (Masteo} என்னுஞ் சகோதரரோடு செல்ல எத்தனிக்கையில், சபையை நடத்த அவர் இத்தாலிய தேசத்திலேயேயிருக்கவேண்டியது அவசியமென்று அர்ச். பாப்பானவருடைய ஸ்தானாபதி அவரைக் கேட்டுக்கொண்டதால், தமக்குப் பதிலாய் தமது சபையின் இரத்தினத்தைப் போலிருந்த அர்ச். அந்தோனியாரை அவ்விடம் அனுப்பிவைத்தார், அர்ச். அந்தோணியார் பிரஞ்சு தேசத்தின் தென்பாகம் சென்று மோம்ப்பெல்லியே (Montpellie) மடத்தில் வாசம் செய்து வந்தார்,

    அவ்விடத்திய பிரிவினைக்காரருடைய தப்பறைகளையும், அவர்கள் செய்து வந்த தந்திர உபாயங்களை யும் நன்றாய் கண்டுகொண்டு தமது தெளிவான பிரசங்கங்களினால் அவைகளை வெளிப்படுத்திப் பிரிவினைக் காரருக்குப் பயங்கரம் வருவித்ததினால் ‘பதிதருடைய சம்மட்டி” என்கிற பெயர் அவருக்கு உண்டாயிற்று. ஆதலால் அவர்களில் திரளான குருப்பிரசாதிகளுக்கு முன்பாகவும், சனங்களுக்கு முன்பாகவும் பிரசங்கம் பண்ணின போது , அதேசமயத்தில் தம்முடைய மடத்துக்கோயிலில் ஒரு வாசகம் பாடவேண்டியிருந்ததென்று அவருக்கு ஞாபகம் வந்ததால், தம்முடைய தலை முக்காட்டை எடுத்து மூடிக்கொண்டு கொஞ்சநேரம் மௌனமாயிருந்தார், அந்த க்ஷணத்திலேயே தமது மடத்துக் கோயிலில் தோன்றிப் பாடலை  முடித்து, பிறகு மேற்றிராசனக் கோயிலில் துவக்கியிருந்த பிரசங்கத்தைத் தொடர்ந்து செய்தார், இது ‘ஓருடல், ஈரிடம்’ எனும் புதுமையாகும.

    மடத்திலிருந்த சகோதரர் தாங்கள் தியானம் செய்கிறபோதும் செபம் செய்கிறபோதும் பக்கத்துக் குளத்திலிருந்த தவளைகள் சத்தம் செய்தபடியால் சகோதரர் முறைப்படுவதை அறிந்த அந்தோனியார் தவளைகளுக்குக் கட்டளையிடவே அவைகள் மெளனமாயின. வேறு குளங்களிற்கொண்டு போய் விடப்பட்டால், அவைகள்  சத்தம் செய்யும். ஆனால் அந்தோனியார் குளம் என்று அதுமுதல் அமைக்கப்பட்ட குளத்தில் விடப்பட்டாலோ, அவை சத்தம் செய்வதில்லை.

    லுனேல் (Lunel) என்னும் பட்டணத்தில் விஸ்தாரமான ஒரு மைதானத்தில் திரளான சனங்களுக்கு முன்பாகப் பிரசங்கம் செய்தபோது, சுற்றிலும் உண்டான குளங் குட்டைகளிலிருந்த பிராணிகளெல்லாம் நரக சத்துருவால் தூண்டப்பட்டு காதுகள் அடைத்துப் போகும்படியான சத்தம் செய்ய அர்ச்சியசிஷ்டவர் அவைகளை  அதட்டி மெளனமாயிருக்கச் செய்தார்.

     எந்த வேலை செய்தபோதிலும், எவ்வளவு அற்புதமான புதுமைகளைச் செய்து வந்தபோதிலும் அர்ச். அந்தோனியார் தமது மடத்தின் ஒழுங்குகளை அதுசரிக்கிறதில் வெகு பிரமாணிக்கராயிருந்தார், கீழ்ப்படிதல் என்னும் புண்ணியம் அவரிடத்தில் விசேஷமான பிரகாரம் விளங்கிற்று. அற்ப காரியங்க ளானாலும், அவைகளை நுணு நுணுக்கமாய் அநுசரித்து வந்தார். கீழ்ப்படிதலினிமித்தம் ஒழுங்கு தவறாதிருக்கவேண்டி இரண்டு ஸ்தலங்களில் இருக்கும்படி சர்வேசுரன் கிருவை செய்தார், இன்னமும் அர்ச்சியசிஷ்டவர் செய்துவந்த அநேக அற்புதங்களைக்கொண்டு மடத்துச் சந்நியாசிகள் அவருக்கு வெகு வணக்க மரியாதை  செலுத்தி வந்தார்கள்.

நாம் செய்து வருங் திருத்தியங்களெல்லாம் பிரமாணிக்கத்தோடும்நல்ல மனதோடும்ஒழுங்காயும் செய்தோமேயானால் அக்கிருத்தியங்கள் வெகு சொற்ப மானாலும் ஆண்டவருக்கு மிகவும் பிரியமானவையும் நமது ஆத்துமங்களுக்குப் பிரயோசனமானவையுமாயிருக்கு மென்பதற்குச் சந்தேகமில்லை.

     ஒன்பதாம் பத்திநாதர் என்னும் அர்ச். பாப்பானவர் பிரஞ்சு தேசத்தின் இரணியத்துக்காகச் செபித்த செபம்

     ஓ மரியாயே, சென்மப் பாவமில்லாமல் உற்பவித்தவளே, பிரஞ்சு தேசத்தைக் கண்ணோக்கிப் பாரும், பிரஞ்சு தேசத்துக்காக வேண்டிக்கொள்ளும், பிரஞ்சு தேசத்தை இரட்சியும். எவ்வளவுக்கு அதிக குற்றவாளியாயிருக் கின்றதோ, அவ்வளவுக்கு உம்முடைய ஒத்தாசை அதற்குத் (தேவையிருக்கின்றது. உமது கரங்களில் நீர் ஏந்தியிருக்கும் சேசுநாதரிடத்தில் நீர் ஒரு வார்த்தை சொல்லுவிரேயானால், பிரஞ்சு தேசம் இரட்சிக்கப்படும். தேவமாதாவுக்கு எப்போதும் கீழ்ப்படிதலுள்ள சேசுநாதரே, பிரஞ்சு தேசத்தை இரட்சியும் – ஆமென்சேசு.

நற்கிரியை – பிரிவினைக்காரருக்குப் புத்தி சொல்லுகிறது.

மனவல்லயச் செபம் – பிரிவினைக்காரரை மனந் திருப்பின அர்ச்.  அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Leave a comment