Devotion to St. Anthony (Day 25)

இருபத்தைந்தாம் நாள்

பெரார் மிலான் (Ferrare, Milan) இன்னும் பிற இடங்களில் நடந்த நிகழ்ச்சி

கொஞ்ச காலங்களுக்குள்ளாகத் தாம் இறக்க போவதை அர்ச் அந்தோனியார் ஞான திருஷ்டியால் அறிந்து அதிகமதிகமாய்ப் பிரசங்கம் செய்ய சர்வேசுரனுடைய மகிமையையும் பிறருடைய இரக்ஷண்ணியத்தையும் தேழ். அவைகளுக்காக உழைத்தார் பெரார் பட்டணத்தில் சிறிதுகாலந் தங்கி வேலை செய்தார் அவ்விடத்திலிருந்த தெல்வாதோ தேவமாதாவின் (Sancta Maria del vado ஆலயத்துக்கு அடிக்கடி சென்று மகிமை பொருந்திய ஆண்டவளே” “O Gloriosa Domina” என்னும் செபத்தைச் செய்வதில் பிரியங்கொள்ளுவார் அப்பட்டணத்திலிருந்த போதுதான் அறியாயமாய்க் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெரிய குடும்பத்துப் பெண்பிள்ளையின் மாசற்ற தனத்தைப் பாதுகாத்தார். எப்படியென்றால், துரைமகள் ஒருத்தி சமுசார வாழ்க்கையில் பிரமாணிக்கற் தப்பி நடந்ததாகத் தன் புருஷனாலேயே குற்றஞ் சாட்டப்பட்டதினால் வெகுவாய்க் துன்பப்பட்டு அர்ச்சியசிஷ்டவருடைய உதவியை மன்றாடினாள் அந்தோனியார் அவளுடைய வீட்டுக்குப் போய் அவள் புருஷனுக்கு முன்பாகவே அவன் சந்தேகப் படுவதற்குக் காரணமாயிருந்த இரண்டு மூன்று மாசத்துக் குழந்தையைத் தமது கையில் எடுத்து வைத்துக்கொண்டு, அதன் தகப்பன் யாரென்று சொல்லும்படிக்குத் திருக்குழந்தையான சேசுநாதர் நாமத்தாற் கட்டளையிடவே, அச்சிறு பாலகன் துரையைக் காண்பித்து: ‘இதோ என்னுடைய தகப்பன்’ என்று தெளிவாய்ச் சொல்லிற்று. அப்போது அந்தோனியார் தகப்பனை நோக்கி: இது உன் பிள்ளையானதால் அதன்மேற்பட்சமாயிரு, அதனுடைய தாயும் உனக்குத் துரோகம் செய்யாததால் அவள் விஷயத்திலும் மரியாதையாய் நடந்துகொள் என்று சொல்லி விட்டுப் போனார்.

அக்காலத்தில் அர்ச் பிரான்சீஸ்கு சபை அதிசிரேஷ்டர் புளோரென்சு (Florence) பட்டணத்தில் பிறந்தவரானதால் தம்முடைய சொந்த நாட்டில் அர்ச். அந்தோனியார் பிரசங்கம் செய்யும்படி கேட்டுக் கொண்டதின்பேரில் அந்நகருக்கு

அந்தோனியார் போய் நான்கு மாசகாலம் பிரசங்கம் செய்து வந்தார் அப்பட்டணத்திலும் சரி, வேரெந்த நாட்டிலும்சரி, அதிக வட்டி  வாங்கினவர்கள் அபரிமிதமாயிருந்ததால். அவ்வநியாயனான நடத்தையின் பேரில் அடிக்கடி பிரசங்கம் செய்து அநேகரை மனந்திருப்பினார். அப்போதுதான் அவ்விடத்திலிருந்த ஒரு பேராசை பிடித்தவன் இறந்துபோய், இவ்வுலகத்தில் ஆஸ்தி பணங்களை மிதமிஞ்சி ஆசித்த அவன் இருதயம் அவன் திரவியங்களை மறைத்து வைத்திருந்த இருப்புப் பெட்டிக்குள்ளிருக்குமென்று ஞான திருஷ்டியால் அறிந்து மற்றவர்களுக்கு அறிவித்திருந்தார். அதே பிரகாரம் அவன் மரித்த பிறகு அவன் பணப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது பணத்தின்மேல் அவன் இருதயம் துடித்துக்கொண்டு கிடக்கிறதை எல்லோருங் கண்டு அதிசயித்து அதுமுதல் அநியாய வட்டி வாங்குகிறதை வீட்டுவிட்டார்கள்,

1229ம் வருஷம் மே மாதத்தில் மிலாள் பட்டனத்தில் பிரசங்கித்து மற்ற இடங்களிலும் வேத வாக்கியத்தை அறிவிக்க வேண்டுமென்று விரைந்து போகையில் வழியிலிருந்த வெர்சேய் நகரில் தங்கித் தமது சிநேகிதரைக் கண்டு தமக்குக் கிட்டியிருக்கிற மரணத்தை அவருக்கு அறிவித்து விட்டு, வாரேஸ் என்னும் இடத்தில் ஓர் மடத்தைக் கட்டுவித்து அதில் ஒரு கிணறு எடுக்கச்செய்து அந்தக் கிணற்றின் தண்ணீணீருக்குக் காய்ச்சலைச் சௌக்கியப்படுத்தும் குணத்தைக் கொடுத்தார். அந்த உதவி தங்களுடைய பட்டணத்துக்கும் செய்யும்படி வெர்சேய் மக்கள் மிகவுங் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால் அவர்களுக்கும் அவ்வூர் கிணற்றின் தண்ணீரை மந்திரித்துக் கொடுத்தார்.

1230ம் வருஷத் துவக்கத்தில் சிலநாள் ஞான ஒடுக்கஞ் செய்தபிறகு, பெரெஸ்ஸியா (Brescia) பட்டணத்தில் பிரசங்கித்து, வால் தே பெரேஞா (Val de Bregna) என்ற விடத்தில் ஓர் மடத்தையும் கட்டுவித்து, அம்மடத்தில் சிறிது காலம் ஒழுங்குகளை எல்லாம் நல்லபடியாய் அநுசரித்துத் தமது சரீரத்தைக் கடின தபசினால் தண்டித்து வந்தார். அவர் படுத்திருந்த கடினமான கல்லை இன்னமும் அம்மடத்தில் வெகு பூச்சியமாய் வைத்திருக்கிறார்கள்.

கடைசியாய் மான்த்துவா (Mantua) பட்டணம் சேர்ந்து, அவ்விடத்தினின்று ரோமாபுரி போய் 9-ம் கிறகோரியுஸ் என்னும் பாப்பானவரைத் தரிசித்தபோது, அந்தப் பாப்பானவர் அவரைக் கண்டு களித்து அவரை ரோமாபுரியில்தானே திரும்பவும் நிறுத்திக் கொள்ளப் பிரயாசைப்பட்டார். ஆனால் அது நிறைவேறவில்லை. அந்தோனியார் சிலகாலம் ஆல்வொன் (Alverne) என்னும் ஸ்தலத்தில் தியான ஏகாந்தத்திலிருந்த பிறகு தமக்கு மிகவும் பிரியமான பதுவா பட்டணம் போய்ச் சேர்ந்தார். நமது சீவிய காலத்தின் பலபல தொந்தரவு தொல்லை களில், நமது ஆத்துமத்தை நாம் மறந்துவிடாமல், எப்போதாவது தனித்து நமதாத்தும காரியங்களை யோசித்துக் கவனிக்கக்கடவோம்.

செபம்

அநேகாயிரம் பாவிகளை மனந்திருப்ப அர்ச். அந்தோனியாருக்கு வரந் தந்தருளின சர்வ வல்லபரான சர்வேசுரா, நானும் என் பாவங்களை வெறுத்து மனந்திரும்பி இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் நித்தியமாய் உம்மை நேசிக்கும்படி அர்ச். அந்தோனியாருடைய பேறுபலன்களைப் பார்த்து அடியேனுக்குக் கட்டளையிட்டருளும் – ஆமென்.

நற்கிரியை: உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்காகப் பூசை செய்து வைக்கிறது.

மனவல்லயச் செபம்: தியான யோகத்தில் உயர்ந்தவ ரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

ஜனவரி மாதம் 3-ம் தேதி

ஜனவரி மாதம் 3-ம் தேதி

St. Genovieve, V.
அர்ச். ஜெனோவியேவ் அம்மாள் – கன்னிகை
(கி.பி. 422).

அர்ச். ஜெனோவியேவ் அம்மாள் 422-ம் வருஷம் பிரான்சு தேசத்தில் பிறந்தாள். அவள் ஏழு வயதில் தன் கன்னிமையை சர்வேசுரனுக்கு ஒப்புக் கொடுத்தாள். தன் 15-ம் வயதில் கன்னியர் உடுப்பு தரித்துக்கொண்டாள். நாளுக்கு நாள் புண்ணியத்தில் வளர்ந்து 50 வயது வரை வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சிறிது ரொட்டியும், பருப்பும் அருந்திவந்தாள். மயிர் ஒட்டியாணம் தரித்துக் கடுமையாக தவம் புரிவாள். மிகவும் பக்தி உருக்கத்துடன் இடைவிடாமல் ஜெபத் தியானம் செய்வாள். பிறர் சிநேகத்தை மனதில் கொண்டு பெரிய பட்டணங்களுக்குப் பயணமாய் போய் அநேக புதுமைகளைச் செய்து, தீர்க்கதரிசனங்களைக் கூறி, எல்லோராலும் வெகுவாய் மதிக்கப்பட்டாள். இந்தப் புண்ணியவதியின் மீது காய்மகாரம் கொண்டவர்கள் இவளைப் பலவிதத்திலும் துன்பப்படுத்தினபோதிலும், இந்த அர்ச்சியசிஷ்டவள் சற்றும் கலங்காமல் தன் நம்பிக்கையை ஆண்டவர் மீது வைத்து, ஜெப தபத்தால தன் பகைவர்களை வென்றாள். அச்சமயம் அத்தில்லா என்னும் கொடுங்கோலன் பாரிஸ் நகரைக் கொள்ளையடிக்க வந்தபோது அவள் உரைத்த தீர்க்கதரிசனத்தின்படி அந்தப் பெரும் பொல்லாப்பு நீங்கியது. ஜெனோவியேவ் அம்மாள் தன் 89-ம் வயதில் அர்ச்சியசிஷ்டவளாக மரித்தாள்.

யோசனை

நாமும் இந்த அர்ச்சியசிஷ்டவளைக் கண்டுபாவித்து, துன்ப துரிதத்தாலும் பொல்லாதவர்களுடைய தூற்றுதலாலும் மனம் சோர்ந்துபோகாமலும் உலக உதவியை விரும்பாமலும் ஜெபத்தால் தேவ உதவியை மன்றாடுவோமாக.

ஜனவரி மாதம் 2-ம் தேதி

St.Macarius, A.**அர்ச்.மக்காரியுஸ் – மடாதிபதி**(கி.பி.394)*


அலெக்சாந்திரியா என்னும் பட்டணத்தில் பிறந்து, பழம் வியாபாரம் செய்து வந்த மக்காரியுஸ் உலக வாழ்வில் கசப்புற்று சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்ய தீர்மாணித்து, நாட்டை விட்டு காட்டுக்குச் சென்று அவ்விடத்தில் கடும் ஜெப தபங்களை நடத்தி வந்தார். அவருக்கு சீஷர்களான அநேகர் அக்காட்டில் சிறு குடிசைகளில் வசித்து, தங்கள் சிரேஷ்டரான மக்காரியுஸின் தர்ம செயல்களைப் பின்பற்றி, புண்ணியவாளராய் வாழ்ந்தார்கள்.

மக்காரியுஸ் இடைவிடாமல் ஜெபம் செய்வார். கூடைகளை முடைவார்.  கனி, கிழங்கு, கீரை முதலியவற்றை ஒரு நாளைக்கு ஒரு தடைவ மாத்திரம் புசிப்பார். பல முறை இரவில் நித்திரை செய்யாமல் சங்கீதங்களைப் பாடி ஜெபிப்பார். ஒருநாள் இவருக்கு அனுப்பப்பட்ட ஒரு திராட்சைக் குழையைப் புசிக்காமல் தமது சன்னியாசிகளுக்கு அனுப்பினார். அவர்களும் அதை புசிக்காமல் மக்காரியுசுக்கு அனுப்பி விட்டார்கள். அவரும் தமது சன்னியாசிகள் மட்டசனம் என்னும் புண்ணியத்தைக் கண்டிப்பாய் அனுசரிப்பதை அறிந்து சந்தோஷமடைந்தார். வனவாசிகளுக்குள் ஒருவர் தான் முடைந்த பாய் கூடைகளை விற்றதினால் வந்த பணத்தை தம்மிடம் வைத்துக்கொண்டு இறந்ததினால், அப்பணத்தை அவருடைய பிரேதக் குழியில் அவரோடு போட்டுப் புதைக்கும்படி அர்ச்.மக்காரியுஸ் கட்டளையிட்டார். இவர் இவ்வளவு கடின தவம் செய்துவந்தும், இவருக்குப் பல சோதனைகளுண்டாக, அவைகளை ஜெபத்தால் ஜெயித்தார். ஆரிய பதிதர் வயோதிகரான அர்ச்.மக்காரியுஸை பல விதத்தில் துன்பப்படுத்தினார்கள். இந்த மகா அர்ச்சியசிஷ்டவர் சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து கி.பி.394-ம் வருடம் மோட்ச பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டார்.


*யோசனை*
நாமும் இந்தப் பரிசுத்த வனவாசிகளைப் பின்பற்றி போசனப்பிரியத்துக்கு இடம் கொடாமல், மட்டசனமென்னும் புண்ணியத்தை கடைபிடிப்போமாக.

ஜனவரி மாதம் 1-ம் தேதி* The Circumcision of Our Lord *விருத்தசேதனத் திருநாள்

LIVES OF SAINTS
அர்ச்சியசிஷ்டவர்களின் சரித்திரம்

ஒவ்வொரு தேதியிலும் வாசிக்க வேண்டிய அந்தந்த அர்ச்சியசிஷ்டவரின் சரித்திரம் சுருக்கமாய் கொடுக்கப்பட்டிருப்பதின் காரணம் யாதெனில், பலர் தங்களுக்கு வாசிக்கப் போதுமான நேரமில்லையென்று சொல்லி அதை வாசியாமல் விட்டுவிடக்கூடாதென்பதற்காகவே. நாலைந்து நிமிடங்கூட கிடைக்கப் பெறாமற் போகிறவர்கள் யாருமிரார். மேலும் அந்தந்த தேதியில் குறிக்கப்பட்டிருக்கின்ற யோசனையை விசுவாசிகள் தங்கள் மனதில் வைத்து, அதை அந்தந்த நாளில் அப்போதைக்கப்போது சிந்திப்பார்களேயானால், பெரிதும் ஞானப்பிரயோசனமடைவார்கள்.

ஜனவரி மாதம் 1-ம் தேதி
The Circumcision of Our Lord
விருத்தசேதனத் திருநாள்

திவ்விய பாலகனுக்கு விருத்தசேதன சடங்கு
நிறைவேற்றப்படுகிறது.

விருத்தசேதனமானது அபிரகாமுடைய சந்ததியை மற்ற ஜனங்களினின்று பிரித்துக் காட்டும் அடையாளச் சடங்கு. மோசஸ் பத்துக் கற்பனையைப் பெறுவதற்கு அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பே விருத்தசேதனச் சடங்கு சர்வேசுவரனால் ஏற்படுத்தப்பட்டது. இதை யூதர்கள் வெகு கண்டிப்பாய் அநுசரித்து வந்தார்கள். இச் சடங்கை நிறைவேற்றும் போது குழந்தையின் சரீரத்தில் கொஞ்சம் சதை அறுக்கப்படும். நமது திவ்விய கர்த்தர் இச் சடங்கை அநுசரிக்க கடமைப்படாவிடினும் தாம் எடுத்த சரீரம் மெய்யான மனித சரீரமென்று காட்டி, சகலரும் தேவ கட்டளைக்கு அமைந்து நடக்க வேண்டுமென்று நமக்கு படிப்பிக்கும் பொருட்டு, அவர் தமது மாசற்ற சரீரத்தில் காயப்பட்டு இரத்தம் சிந்த சித்தமானார். நாமும் நமதாண்டவருடைய திவ்விய மாதிரியைக் கண்டுபாவித்து, வேத கற்பனையையும், திருச்சபைக் கட்டளையையும் பக்தியோடு அநுசரிப்போமாக. மேலும் நமது இருதயத்தில் கிளம்பும் ஆசாபாசங்களையும், ஒழுங்கற்ற நாட்டங்களை ஒறுத்தலாகிய கத்தியால் அறுத்துக் காயப்படுத்தி, ஞானவிதமாக இரத்தம் சிந்தப் பழக வேண்டும். கண், காது, வாய் முதலிய ஐம்புலன்களை அடக்கி ஒறுப்பவன் பாவத்திற்கு உடன்பட மாட்டான். ஆகையால் இந்த ஒறுத்தல் முயற்சியை ஜெபத்தால் அடைவோமாக.

இந்தப் புது வருடத் துவக்கத்தில் நமது பழைய பாவ நடத்தையை வி;ட்டொழித்து, துர்ப் பழக்கங்களை மாற்றிவிட்டு, புது வாழ்க்கை வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளக்கடவோம்.

யோசனை
நாம் இந்தப் புதுவருடத்தில் எந்தெந்தப் பாவத்தை விட்டொழித்து, எந்தெந்தப் புண்ணியத்தைச் செய்ய தீர்மாணித்தோமோ, அதை இன்றே செய்ய முயற்சிப்போமாக.

அர்ச், அந்தோனியார் வணக்கமாதம் பதிமூன்றாம் நாள்

அர்ச். அந்தோனியார் பூர்ஜ் பட்டணத்திலிருந்த காலத்தில் அவ்விடத்தில் பேர்போன அவிசுவாசியொருவனிருந்தாள். அவனுடைய பெயர் கய்யார். (Guyard) அவன் கத்தோலிக்கருடைய விசுவாச சத்தியங்களெல்லாம் மறுத்து அநேகருக்குத் தூர்மாதிரிகை காட்டிவந்தான். ஒருநாள் அந்தோனியாருடன் வேத சத்தியங்களைக் குறித்து வெகுநேரம் தர்க்கமாடன்பிறகு தன் தப்பறைகளைக் கொஞ்சம் கண்டுபிடித்தான். ஆனாலும் தேவநற்கருணையில் சேசுநாதர் சுவாமி மெய்யாகவே எழுந்தருளியிருப்பதைப் பற்றி அவன் சந்தேகமுள்ளவனாய், ஒருதாள் அர்ச்சியசிஷ்டவரை நோக்கி அவன் சொன்னதாவது: நீர் ஏதாவது ஒரு பிரசித்தமான அடையாளத்தைக் கொண்டு நீர் போதிப்பதெல்லாம் உண்மைதானென்று ருசுப்படுத்தினால் நானும் என்னைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் உம்முடைய வேதத்தை அனுசரிக்க ஏற்றுக்கொள்ளுகிறோம். என்னிடம் ஒரு கோவேறு கழுதையிருக்கின்றது. மூன்றுநாள் வரைக்கும் நான் அதற்குத் தீனி ஒன்றும் வைக்காமல் சகல சனங்களுக்கும் முன்பாக விஸ்தாரமான ஸ்தலத்துக்கு அதையோட்டிவந்து, கொள்ளை அதற்கு முன்பாக வைக்கிறேன். அதே சமயத்கில் சேசுநாதருடைய சரீரமென்று நீர் ‘சொல்லுகிற தேவ நற்கருணையைக் கொண்டுவந்து அதற்குக் காண்பியும். அந்த மிருகம் கொள்ளைச் சட்டைசெய்யாமல் தன் கால்களை மடித்துத் தேவநற்கருணைக்கு முன்பாகச் வணக்கம் செய்தால் நான் உடனே கத்தோலிக்கு வேதத்திற்கு சேருகிறேன் என்றான். |

பக்தி விசுவாசம் நிறைந்த அர்ச்சியசிஷ்டவர் அதற்குச் சம்மதித்துப் போய் அந்த மூன்று நாளும் செபத்திலும், தவத்திலும் செலவழித்தார். குறிக்கப்பட்ட நேரத்தில் ஏற்கனவே திரளான பிரிவினைக்காரரும் மற்றவர்களும் கூடியிருந்த ஸ்தலத்துக்குத் தேவ நற்கருணை வைத்திருந்த கதிர்ப்பாத்திரத்தை எடுத்து வந்தார். அதே தருணத்தில் பட்டினியால் மெலிந்து இளைத்துப்போயிருந்த கோவேறு கழுதைக்கு முன்பாகக் கொள் இருந்த தொட்டியைக் சுய்யாரென்பவன் வைத்தான். அந்தோனியார் கழுதையைப் பார்த்து: நான் அபாத்திரனானாலும் என் கையிலிருக்கிற உன் சிருஷ்டிகருடைய நாமத்தால், புத்தியில்லாத மிருகமே. நான் உனக்குக் கட்டளையிடுகிற தென்னவென்றால், எங்கள் பீடங்களின் மேற் பலியிடப்படும் திவ்விய செம்மறியாட்டுக் குட்டிக்குச் சிருஷ்டிப்புக்கள் யாவும் கீழ்ப்பட்டிருக்கின்றனவென்று அவிசுவாசிகள் கண்டுபிடிக்கத் தக்கதாக, நீ அவருக்கு முன்பாக உடனே வந்து வணக்கம் பண்ணக்கடவாய் என்றார். அந்த க்ஷணத்திலே தானே கோவேறு கழுதை கொள்ளைத் தொடாமல் தேவதற்கருணைக்கு முன்பாக வந்து தன் கால்களை மடித்து வணக்கம் செய்கிற பாவனையாக இருந்தது. கய்யாரும் அவனைச் சேர்ந்தவர்களும் தங்கள் அபத்த மார்க்கத்தை மிட்டு வேறு அநேகரோடு மனந் திரும்பினார்கள். இந்தப் புதுமை நடந்த போதுதான் “பிரிவினைக்காரருடைய சம்மட்டி’ என்கிற மகிமையான பெயர் அந்தோனியாருக்கு ஏற்பட்டதென்று அநேக சொல்லு கிறார்கள். இந்தப் புதுமை நடந்த விடத்திலே சேம் பியேர் லெ கய்யார் (St.Pierre Is Guyard) என்ற கோயில் கட்டப் பட்டிருக்கிறது. திரளான பாவிகளை, பிரிவினைக்காரரை மனந்திருப்ப அர்ச், அந்தோனியார் முன் சொன்ன பிரகாரம் அநேகாநேகம் புதுமைகளைச் செய்து வந்தார்.

அர்ச். அந்தோனியார் பிரகங்கம் செய்வதற்குமுன், தன்னைத்தானே தாழ்த்துவார். வேண்டிக்கொள்ளுவார், தன் சரீரத்தை ஒறுத்துக் கடினமாய்த் தண்டிப்பார். பிறகு ஆண்டவருடைய பேரால் பிரசங்கம் செய்வார். மோசேஸ் என்பவர் சர்வேசுரனுடைய பலத்தால் தமது கோலைக் கொண்டு கற்பாறையில் அடிக்கவே, நீருற்றுண்டானதுபோல, அர்ச். அந்தோனியாரும் ஆண்டவருடைய வல்லமையைக் கொண்டு பிரிவிளைக்காரரை மளந்திருப்ப அநேகமான ஆச்சரியங்களைச் செய்து வந்தார். பூர்ஜ் நகரத்தில் நடந்த புதுமையைக்கொண்டு தேவநற்கருணையின் மட்டில் அந்தோனியாருக்குண்டான பக்தி விசுவாச நம்பிக்கை எவ்வளவென்று நாம் அறிந்து கொள்ளலாம். நம் இருதயத்திலும் அவர் அந்தப் பக்தி எழும்பும்படி அவரை நோக்கி மன்றாடக்கடவோம்.

செபம்

மகா வணக்கத்துக்குரிய அர்ச், அந்தோனியாரே, பிரிவினைக்காருடைய அவிசுவாசத்தைப் போக்க, தேவ நற்கருணையில் சேசுநாதசுவாமி மெய்யாகவே எழுந்தருளி யிருக்கிறதை ஒரு மிருகத்தைக் கொண்டு அதை வணங்கச் செய்து ருசுப்படுத்தின நீர், உயிருள்ள விசுவாசத்தோடு அந்தத் திவ்விய நற்கருணையை நாங்கள் ஆராதிக்கக் கிருபை அடைந்தருளும். – ஆமென் .

நற்கிரியை: திவ்விய நற்கருணையைச் சந்திக்கிறது.

மனவல்லயச் செபம்: தேவ சிநேகத்தால் பற்றி எரிந்த அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Devotion to St. Antony in Tamil Day 11

அர்ச், அந்தோனியார் புயி பட்டணத்தில்
நடத்தின வரலாறுகள்  


கொஞ்ச நாட்களுக்குள்ளாக, நெடுஞ் சீவியஞ் சீவித்தார்” வேறு வேத புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியத்தை அர்ச். அந்தோனியாரைப்பற்றி நன்றாய்ச் சொல்லலாம். எப்படியெனில் அர்ச். அந்தோனியார் சீவித்த காலம் கொஞ்சமானதானாலும், அவர் அநேக இடங்கள் சென்று ஏராளமான பிரிவினைக்காரரை மனந்திருப்பி எண்ணிறந்த அற்புதங்கள் செய்ததால் வெகு நாள் சீவித்தாரென்றும் சொல்லலாம்.

1225-ம் வருஷம் செப்டம்பர் மாதத்தில் வேலே (Velay) நாட்டில் புயி (Puy) பட்டணத்தின் மடத்துக்கு அர்ச். அந்தோனியார் சிரேஷ்டராக நியமிக்கப்பட்டார், அவ்விடத்தில் சந்நியாசிகளுக்குச் சகலத்திலும் நன்மாதிரிகை தந்து, தமது பொறுமையினாலும், சாந்த குணத்தினாலும் சகலரையும் மடத்து ஒழுங்குப் பிரகாரம் நடத்தி, அவர்கள் புண்ணியத்தில் மேன்மேலும் வளரும்படி செய்து, சகலராலும் (நேசிக்கவும், வணங்கவும் மரியாதை செய்யவும் பட்டு வந்தார்.

சிறிது காலம் மடத்திலிருந்து தமது சகோதரைப் புண்ணிய நன்னெறியில் நிலை நிறுத்தின பிறகு பிரசங்கம் செய்ய ஆரம்பித்து வேலே தேசத்து மலைகளில் ஓடி ஒளிந்துகொண்டிருந்த பிரிவினைக்காரரைத் தேடி அவர்களை மனந்திருப்பினார். ஆனதால் அவருடைய அமிர்தப் பிரசங்கங்களைக் கேட்க நாலா பக்கங்களிலுமிருந்து மக்கள் கும்பல் கும்பலாய் ஓடி வருவார்கள். புயி பட்டணத்தில் அவரிருந்த கொஞ்ச நாட்களுக்குள்ளாக சர்வேசுரனிடத்தினின்று தாம் அடைந்திருந்த தீர்க்கதரிசன வரத்தை இருமுறை வெளிப்படுத்தினார். எப்படியென்றால், அவரிருந்த பட்டணத்தில் துரிமார்க்கனும் அவிசுவாசியுமான ஒரு மனிதனிருந்தான். அவன் பட்டணத்தில் சகலராலும் அறியப்பட்டவன். அப்பேர்பட்டவனை அந்தோனியார் காணும்போதெல்லாம் அவனுக்கு முன்பாக முழங்காலிலிருந்து வணக்கம் செய்து வருவார். இப்படியிருக்க ஒருநாள் அந்த மனிதன் அர்ச். அந்தோனியார் தன்னை வெட்கப்படுத்தி அவமானம் பண்ணு வதற்காக பரிகாசமாக இவ்விதம் செய்து வருகிறாரென்றெண்ணி அவரைப் பார்த்து: “நீ இவ்விதம் செய்யவேண்டிய காரணமென்ன? சர்வேசுரனுடைய தண்டனைகளுக்கு நான் பயப்படாதிருந்தால், உம்மை என்னுடைய ஈட்டியினால் குத்தி உமது உயிரை வாங்கியிருப்பேன்” என்றான். அப்போது அர்ச்சியசிஷ்டவர் ‘என் சகோதரனே, சேசுகிறிஸ்துநாதருக்காக என் பிராணனைக் கொடுப்பதற்கு என் சீவியகால முழுமையும் ஆசித்தேன். என் ஆசை நிறைவேறச் சுவாமிக்குச் சித்தமில்லை போலும். ஆனால் நீர் வேதத்துக்காக உமது இரத்தம் சிந்துவீரென்று எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நீர் உமது இரத்தம் சிந்தி வேதசாக்ஷி முடி அடையும் போது நான் இன்று உமக்குச் சொல்லுகிறதை நினைத்துக்கொள்ளும்” என்றார், அவர் சொன்ன பிரகாரமே அந்த மனிதன் சிறிது நாட்களுக்குள்ளாக மனந்திரும்பி, துலுக்கருடைய இராச்சியத்தில் வேதம் போதிக்கப்போன குருக்களோடு தானும் சென்று அக்கொடியவர்கள் கைகளில் அகப்பட்டு வேதசாக்ஷி முடி பெற்றார்.

உயர்ந்த குலத்திற் பிறந்த துரைமகள் ஒருத்தி தன் பேறுகாலத்தின் போது அநேகமுறை அர்ச்சியசிஷ்டவரிடத்தில் போய் அவர் தனக்காக வேண்டிக் கொள்ளும்படி கேட்டாள். அர்ச்சியசிஷ்டவர் அவளை நோக்கி நீ நம்பிக்கை யாயிருந்து சந்தோஷப்படு. ஏனெனில் நீ ஒரு குழந்தை பெறுவாய், அவர் திருச்சபையில் பெரியவராவார். அர்ச். பிரான்சிஸ்கு சபையில் உட்பட்டு அவரும் அவர் சொல்லும் புத்தியால் இன்னும் அனேகரும் வேதசாட்சி முடி அடைவார்கள் என்றார். அவர் சொல்லிய வண்ணம் குழந்தை பிறந்து அர்ச். பிரான்சிஸ்கு சபையில் உட்பட்டுக் கடைசியாய் அநேகம் பேர்களோடு துலுக்கர் கையில் அகப்பட்டு வெகுவாய் உபாதிக்கப்பட்டு வேதசாட்சி முடி அடைந்தார்.

அர்ச், அந்தோனியாரைப்பற்றி எழுதப்பட்டிருப்பது என்னவெனில்: ‘ஓ அந்தோனியாரே, உன்னதமான மகிமையாய் உம்மிடத்தில் தீர்க்கதரிசன வரம் விளங்கினதைப் பற்றி மனங்களிகூரும், சர்வேசுரனுடைய தேவ இஷ்டப் பிரசாதத்தினால் நிரப்பப்பட்டிருந்ததினாலல்லவோ, தீர்க்கத்தரிசனங்களை அருளினீர்” என்று எழுதப்பட்டிருக்கின்றது.

சர்வேசுரன் அர்ச். அந்தோனியாருக்குத் தந்தருளின தீர்க்கத்தரிசன வரத்தைக்கண்டு நாம் ஆச்சரியப்பட்டு அவருக்கு நன்றியறிந்த தோத்திரங்கள் செலுத்தி அர்ச். அந்தோனியாருடைய புண்ணிய மாதிரியைத் தாழ்ச்சியுடன் பின்பற்றி நடக்கக் கடவோம்.

செபம்

சிலுவையில் அறையப்பட்டுத் தமது இரத்தமெல்லாம் ஐந்து காயங்கள் வழியாய் மனிதர் இரக்ஷணியத்துக்காகச் சிந்தின சேசுநாதரைப் பற்றி உம்முடைய இரத்தத்தையும் சிந்தி வேதசாட்சி முடியடைய ஆசைப்பட்டவரான அர்ச். அந்தோனியாரே, அபாத்திரரான அடியோர்களுடைய பாவங்கள் சேசுநாதசுவாமி சிந்தின திரு இரத்தப் பலன்களால் பரிகாரமாகும்படி அவரை மன் றாட உம்மைப் பிரார்த்திக்கிறோம். – ஆமென்.

நற்கிரியைஒரு ஒறுத்தல் முயற்சி செய்கிறது.

Devotion to St. Antony in Tamil (Day 9)

ஒன்பதாம் நாள்

பிரஞ்சுராச்சியத்தில் அர்ச். அந்தோணியார் நடத்தின காரியங்கள் 

   பக்திச் சுவாலகருக்கொப்பான அர்ச், பிராஸ்சிஸ்கு அசிசியார் தம்முடைய பக்தியுள்ள தாயார் பிக்கா  அம்மாள் (Pica) பிரோவான்ஸ் (Provence) நாட்டிற் பிறந்ததினிமித்தம் பிரஞ்சு தேசத்தின்மட்டில் எப்போதும் விசேஷப்பிரியப் பற்றுதலாயிருந்தார். ஆனதினால் அவர் தம்முடைய சபையில் சேர்ந்த சந்நியாசி குருக்கள் வேதம் போதிக்க ஏற்பட்டபோது அவர்களை மற்றப் பிரதேசங்களுக்கு அனுப்பிவிட்டுத் தாம் பிரஞ்சு தேசத்தைத் தெரிந்து கொண்டு, அவ்விடம் மஸ்ஸேயோ (Masteo} என்னுஞ் சகோதரரோடு செல்ல எத்தனிக்கையில், சபையை நடத்த அவர் இத்தாலிய தேசத்திலேயேயிருக்கவேண்டியது அவசியமென்று அர்ச். பாப்பானவருடைய ஸ்தானாபதி அவரைக் கேட்டுக்கொண்டதால், தமக்குப் பதிலாய் தமது சபையின் இரத்தினத்தைப் போலிருந்த அர்ச். அந்தோனியாரை அவ்விடம் அனுப்பிவைத்தார், அர்ச். அந்தோணியார் பிரஞ்சு தேசத்தின் தென்பாகம் சென்று மோம்ப்பெல்லியே (Montpellie) மடத்தில் வாசம் செய்து வந்தார்,

    அவ்விடத்திய பிரிவினைக்காரருடைய தப்பறைகளையும், அவர்கள் செய்து வந்த தந்திர உபாயங்களை யும் நன்றாய் கண்டுகொண்டு தமது தெளிவான பிரசங்கங்களினால் அவைகளை வெளிப்படுத்திப் பிரிவினைக் காரருக்குப் பயங்கரம் வருவித்ததினால் ‘பதிதருடைய சம்மட்டி” என்கிற பெயர் அவருக்கு உண்டாயிற்று. ஆதலால் அவர்களில் திரளான குருப்பிரசாதிகளுக்கு முன்பாகவும், சனங்களுக்கு முன்பாகவும் பிரசங்கம் பண்ணின போது , அதேசமயத்தில் தம்முடைய மடத்துக்கோயிலில் ஒரு வாசகம் பாடவேண்டியிருந்ததென்று அவருக்கு ஞாபகம் வந்ததால், தம்முடைய தலை முக்காட்டை எடுத்து மூடிக்கொண்டு கொஞ்சநேரம் மௌனமாயிருந்தார், அந்த க்ஷணத்திலேயே தமது மடத்துக் கோயிலில் தோன்றிப் பாடலை  முடித்து, பிறகு மேற்றிராசனக் கோயிலில் துவக்கியிருந்த பிரசங்கத்தைத் தொடர்ந்து செய்தார், இது ‘ஓருடல், ஈரிடம்’ எனும் புதுமையாகும.

    மடத்திலிருந்த சகோதரர் தாங்கள் தியானம் செய்கிறபோதும் செபம் செய்கிறபோதும் பக்கத்துக் குளத்திலிருந்த தவளைகள் சத்தம் செய்தபடியால் சகோதரர் முறைப்படுவதை அறிந்த அந்தோனியார் தவளைகளுக்குக் கட்டளையிடவே அவைகள் மெளனமாயின. வேறு குளங்களிற்கொண்டு போய் விடப்பட்டால், அவைகள்  சத்தம் செய்யும். ஆனால் அந்தோனியார் குளம் என்று அதுமுதல் அமைக்கப்பட்ட குளத்தில் விடப்பட்டாலோ, அவை சத்தம் செய்வதில்லை.

    லுனேல் (Lunel) என்னும் பட்டணத்தில் விஸ்தாரமான ஒரு மைதானத்தில் திரளான சனங்களுக்கு முன்பாகப் பிரசங்கம் செய்தபோது, சுற்றிலும் உண்டான குளங் குட்டைகளிலிருந்த பிராணிகளெல்லாம் நரக சத்துருவால் தூண்டப்பட்டு காதுகள் அடைத்துப் போகும்படியான சத்தம் செய்ய அர்ச்சியசிஷ்டவர் அவைகளை  அதட்டி மெளனமாயிருக்கச் செய்தார்.

     எந்த வேலை செய்தபோதிலும், எவ்வளவு அற்புதமான புதுமைகளைச் செய்து வந்தபோதிலும் அர்ச். அந்தோனியார் தமது மடத்தின் ஒழுங்குகளை அதுசரிக்கிறதில் வெகு பிரமாணிக்கராயிருந்தார், கீழ்ப்படிதல் என்னும் புண்ணியம் அவரிடத்தில் விசேஷமான பிரகாரம் விளங்கிற்று. அற்ப காரியங்க ளானாலும், அவைகளை நுணு நுணுக்கமாய் அநுசரித்து வந்தார். கீழ்ப்படிதலினிமித்தம் ஒழுங்கு தவறாதிருக்கவேண்டி இரண்டு ஸ்தலங்களில் இருக்கும்படி சர்வேசுரன் கிருவை செய்தார், இன்னமும் அர்ச்சியசிஷ்டவர் செய்துவந்த அநேக அற்புதங்களைக்கொண்டு மடத்துச் சந்நியாசிகள் அவருக்கு வெகு வணக்க மரியாதை  செலுத்தி வந்தார்கள்.

நாம் செய்து வருங் திருத்தியங்களெல்லாம் பிரமாணிக்கத்தோடும்நல்ல மனதோடும்ஒழுங்காயும் செய்தோமேயானால் அக்கிருத்தியங்கள் வெகு சொற்ப மானாலும் ஆண்டவருக்கு மிகவும் பிரியமானவையும் நமது ஆத்துமங்களுக்குப் பிரயோசனமானவையுமாயிருக்கு மென்பதற்குச் சந்தேகமில்லை.

     ஒன்பதாம் பத்திநாதர் என்னும் அர்ச். பாப்பானவர் பிரஞ்சு தேசத்தின் இரணியத்துக்காகச் செபித்த செபம்

     ஓ மரியாயே, சென்மப் பாவமில்லாமல் உற்பவித்தவளே, பிரஞ்சு தேசத்தைக் கண்ணோக்கிப் பாரும், பிரஞ்சு தேசத்துக்காக வேண்டிக்கொள்ளும், பிரஞ்சு தேசத்தை இரட்சியும். எவ்வளவுக்கு அதிக குற்றவாளியாயிருக் கின்றதோ, அவ்வளவுக்கு உம்முடைய ஒத்தாசை அதற்குத் (தேவையிருக்கின்றது. உமது கரங்களில் நீர் ஏந்தியிருக்கும் சேசுநாதரிடத்தில் நீர் ஒரு வார்த்தை சொல்லுவிரேயானால், பிரஞ்சு தேசம் இரட்சிக்கப்படும். தேவமாதாவுக்கு எப்போதும் கீழ்ப்படிதலுள்ள சேசுநாதரே, பிரஞ்சு தேசத்தை இரட்சியும் – ஆமென்சேசு.

நற்கிரியை – பிரிவினைக்காரருக்குப் புத்தி சொல்லுகிறது.

மனவல்லயச் செபம் – பிரிவினைக்காரரை மனந் திருப்பின அர்ச்.  அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Devotion to St. Antony in Tamil (Day 6)

ஆறாம் நாள்

மோந்ததே பாவோலோ மடத்தில் நடந்த வரலாறு

பாவிகளை மனந் திருப்புவதற்கும், பிரிவினைக்காரரை வெட்கப்படுத்திக் கலங்க அடிக்கிறதற்கும் அர்ச். அந்தோனியாரைத் தெரிந்துகொண்ட கடவுள், கொஞ்ச காலம் அவர் தனிவாசத்திலும் தாழ்மையிலும் இருக்கும்படி சித்தமானார்,

அர்ச், அந்தோனியார் மோந்த்தே பாவோலோ மடம் சேர்ந்தபோது சமையற் சாலையில் தரைகளையும், சமையல் பாத்திரங்களையும் கழுவுகிற வேலையையும், கூட்டிச் சுத்தம் பண்ணுகிற வேலையையும் தமக்குக் கொடுக்கவேண்டுமென்று சிரேஷ்டரை மன்றாடி அந்தத் தாழ்மையான வேலைகளை மகா சுறுசுறுப்போடு செய்து வந்தார். சகோதரர் ஒருவர் அருகிலிருந்த ஒரு கெபியில் ஒரு சிறு குடிசை கட்டிருந்தார், அந்தக் குடிசையை அந்தோனியார் பார்த்தபோது அதைத் தனக்குக் கொடுத்து , விடச் சகோதரரை மன்றாடி, அவருடைய சம்மதத்தின் பேரில் நடுச் சாமத்துச் செபத்துக்குப் பிறகு அந்தோனியார் அந்தக் குடிசைக்குள் போய் செபத்தியானம் பண்ணுவார். கொஞ்சம் உரொட்டியும் தண்ணீருமாத்திரம் சாப்பிட்டு தமக்கு ஒழிந்த உத்தரவான நேரமெல்லாம் அந்தக் குடிசையில் தன்னைத் தானே ஒறுத்துத் தபசு செய்துகொண்டு வந்தார். பசாசுகள் அவரைச் சும்மா விடவில்லை. அவைகள் அவருக்குச் செய்துவந்த தந்திரங்கள் எவ்வளவு பெரிதானாலும் தமது தவ முயற்சிகளாலும், செபத்தினாலும் அவைகளை வென்று பசாசுகளைத் துரத்தியடிப்பார்.

உயர்ந்த குலத்திற் பிறந்த அவர், மேலான சாஸ்திரம்களைக் கற்றறிந்த அவர், அநேகரைத் தமது அருமைப் பிரசங்கங்களால் மனம் திருப்ப வேண்டிய அவர், பதிதருடைய சம்மட்டியென்று அழைக்கப்பட வேண்டிய  அவர், சர்வேசுரன் அவருக்கு அருளிய வரத்தால் அதிக அற்புதங்களைச் செய்ய வேண்டிய அவர், இப்படி தம்மை தானே தாழ்த்தி நீசத் தொழில்களைச் சந்தோஷமாய்ச் செய்து வந்தது எவ்வளவோ ஆச்சரியத்துக்குரிய தாயிருக்கின்றது. அர்ச். அந்தோனியார் தம்முடைய புண்ணியத்துக்காகவும், அர்ச்சியசிஷ்டதனம் அடையவும், பிறர் ஆத்துமங்களை ஈடேற்றத் துக்கு முந்தியும் (செய்துவந்த புண்ணியங்களை நாம் கண்டு அதிசயிக்கத்  தான் செய்வோம். ஆத் (At) என்னுங் குருவானவர் சொல்லியிருக்றெதென்னவென்றால், தாழ்ச்சியென்னும் புண்ணியம் அர்ச். அந்தோனியாரிடத்தில் விசேஷமான விதமாய் விளங்கிற்று. (கொத்திர மகிமையையும், சாஸ்திரத் திறமையையும் கொஞ்சமாவது யோசிக்காமல் தன்னை அற்பமாகவே எப்போதும் எண்ணி வந்தார் என்கிறார்,

தாழ்ந்த வேலைகளை மனச் சந்தோஷத்தோடு செய்து வருவார். இஸ்பிரீத்துசாந்துவானவருடைய நல்ல ஏவுதல்களை அறிந்து தம் இருதயத்தில் அவைகளைப் பதியவைக்க கெபிகளையும் தனி இடங்களையும் தேடித் தியானஞ் செய்வார்,

இந்த அர்ச்சியசிஷ்டவரிடத்தில் விளங்கின புண்ணிய மாதிரிகளை, மட்டற்ற தாழ்ச்சியை, உலக மகிமை கீர்த்தியின்மேல் வெறுப்பைக் கண்ட நாம் நம்மிடத்திலும் அந்தப் புண்ணியங்கள் கொஞ்சமாவது விளங்குவதற்குப் பிரயாசைப்படாதிருக்கலாமோ. பிரயாசைப்பட்டால் அவருடைய ஒத்தாசையைக் கொண்டு நமது பிரயாசைக் களவு அந்தப் புண்ணியங்களை அடைவோம்.

செபம்

உலக வீண் பெருமை சிலாக்கியங்களை அகற்றி நிந்தித்துத் தள்ளின அர்ச். அந்தோனியாரே, தாழ்ச்சியின் உத்தம மாதிரியான சேசுநாதரை பணிவுடன் கண்டுபாவித்த நீர், நாங்களும் எங்கள் ஆங்காரப் பெருமை சிலாக்கியத்தைத் தள்ளி, உம்மை எங்களால் கூடுமான மட்டும் கண்டு பாவிக்கத் தயை செய்தருளும். – ஆமென்.

நற்கிரியை – தாழ்ச்சி முயற்சி ஏதாவது செய்கிறது

மளவல்லயச் செபம் – உத்தம் தாழ்ச்சியிள் மாதிரி யான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

St. Antony Devotion in Tamil (Day 4)

நான்காம் நாள்

அர்ச். அந்தோனியாருடைய அழைப்பு 

1210 ம் வருஷம் நமது அர்ச்சியசிஷ்டவருக்குப் பதினைந்து பிராயமானபோது வெகு அழகு செளந்தரிய முள்ளவராயிருந்தார். உலகத்தில் மற்றவர்களால் மதிக்கப் படுவதற்கும், உத்தியோகப் பெருமைகளை அடைவதற்கும் வேண்டிய ஆஸ்தியோ, நற்குணங்களோ, சாஸ்திரமேr இவையெல்லாம் அவரிடத்தில் குறைவில்லாதிருந்தபோதிலும், நாளுக்குநாள் உலகத்தின் மட்டில் வெறுப்புண்டாகி, சிறு பிராயத்தில் உலக மாயைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்கு ஆசைப்பட்டு, தம்மைப் பெற்றோருடைய அனுமதி பெற்று அர்ச், அகுஸ்தீன் சபைச் சந்நியாசிகளுடைய மடத்திற் சேர்ந்தார். ஆனால் அம்மடம் தாம் பிறந்த பட்டணத்துக்கு வெகு அருகாமையிலிருந்ததாலும், ஏற்கனவே வெகு கட்டாயத்தின்பேரில் தமக்கு உத்தரவு தந்த தாய் தந்தையும் உறவின்முறையார் சிநேகிதர்களும் அருகாமையிலிருந்ததாலும் தன் துறவுகோலத்துக்கு இடையூறு நடக்கக் கூடுமென்று அர்ச்சியசிஷ்டவர் அஞ்சி தூரத்திலுள்ள கோயிம்பிரா பட்டணத்திலிருக்கும் சந்நியாசிகள் மடத்துக்குத் தன்னை அனுப்பிவிடும்படி பெரியவர்களைக் கேட்டுக்கொண்டார். அவ்வாறு அம்மடம் சேர்ந்து செபத்திலும், படிப்பிலும், கைவேலையிலும், தியானத்திலும் மற்றச் சந்நியாசிகளைப்போலக் காலம் செலவழித்து வந்தார். தனக்கிடப்பட்ட வேலைகளை வெகு கீழ்ப்படிதலோடும், சுறுசுறுப்போடும் செய்து வந்தார். ஒருநாள் தமக்கிடப்பட்ட வேலையை அவர் செய்து கொண்டிருந்தபோது, கோயிலில் தேவநற்கருணை எழுந்தேற்ற மணியடிக்கக் கேட்டு தானிருந்த இடத்திலேயே தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து தன் இரக்ஷகரை ஆராதித்தார், ஓ! புதுமை! திடீரென கோயிற் சுவர் விரிந்து

மடத்துக் கோயில் பீடத்துக்கு முன்பாக முழங்காற்படி பிட்டது. அதனால் அது சர்வேசுரனுடைய சித்தமென்ரறிந்து அர்ச். பண்டங்கள் அடங்கியிருந்த பெட்டியைப் மடத்தின்மேல் ஸ்தாபித்து வைத்தார்கள். இதைக் கண்ட அர்ச். அந்தோனியாருடைய மனதில் அப்போதே பிரதேசங்கள் போய் வேதத்தைப் போதிக்கவும், வேதசாக்ஷ முடி பெறவும் அளவற்ற ஆசை பிறந்தது.

ஆனதால் தாமிருந்த மடத்தை விட்டு அர்ச். பிரான்சீஸ்கு சபையிற் சேரவேண்டுமென்கிற எண்ணம் அவருக்கு உண்டான போதிலும் சர்வேசுரனுடைய சித்தமென்னவோவென்று தன் மனதில் தத்தளித்து, அர்ச். பண்டங்களுக்கு முன்பாக வேண்டிக்கொண்டு வந்தபோது, ஓர் இரவு அர்ச். பிரான்சிஸ்கு அவருக்குத் தரிசனை காண் பித்து அவர் தம்முடைய சபையிற் சேர சர்வேசுரன் பேரால் அவருக்குக் கட்டளையிட்டார்.”

அப்போது அவரிருந்த மடத்துச் சிரேஷ்டரும் மற்றச் சகோதரர்களும் அதிக விசனமடைந்தாலும், பிரான்சிஸ்கு சபைச் சந்நியாசிகள் கொண்டுவந்த கனமான அங்கியைத் தரித்து மாரோக் தேசம் அனுப்பப்படுகிற வார்த்தைப் பாட்டின்மேல், வேதிசாகூ முடி, பெறலாமென்கிற ஆசையோடு அந்தோனியாரென்னும் பெயர் வைத்துக் கொண்டு புறப்பட்டார்.

`      நம்முடைய அழைப்புக்குத் தகுந்த பிரகாரம் நமது அந்தஸ்தில் நாம் செய்யவேண்டிய காரியங்கனோ, படவேண்டிய பாடுகளோ, சர்வேசுரன் அநேகங் கட்டளையிட்டிருந்தபோதிலும் அவைகளையெல்லாம் நாம்  நிறைவேற்றவோ, சகிக்கவோ, வரும் தந்திரங்களைச் செயிக்கவோ வேண்டிய ஒத்தாசை, தைரியம், வரப்பிரசாதம் நமக்குக் கொடுக்கிறார். அர்ச், அந்தோனியாருடைய தாய் தகப்பன் தாங்கள் அருமையாய் வளர்த்த பிள்ளையைச் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தது போல், பிள்ளைகளைப் பெற்ற தாய் தகப்பன்மாரே, நாம் எல்லோருமே சர்வேசுரனுக்குச் சொந்தமாயிருக்கிறபடியினாலே, உங்கள் பிள்ளைகளைச் சர்வேசுரன் அமைக்கத் திருவுளமானால் அவர்களைச் சந்தோஷமாய் அவருக்கு ஒப்புக்கொடுங்கள். இப்படிச் செய்வதால் உங்கள் மட்டிலும் உங்கள் பிள்ளைகளின் மட்டிலும் தேவாசீர்வாதமும் அர்ச். அந்தோனியாருடைய அனுக்கிரகமும் உண்டாகும்.

செபம் ‘

ஓ மகா மகிமை பொருந்திய அர்ச். அந்தோனியாரே, உலக ஆபத்துகளையும், தந்திரச் சோதனைகளையும் நீக்கி விலகுகிறதற்கு உலகப் பெருமை, ஆஸ்தி, சுகம் இவை யாவையும் புறக்கணித்துச் சந்நியாசி கள் சபையில் உட்பட்டீரே, அடியோர்களுக்கும் உலக வீண் பெருமை, சிலாக்கியம், சுகம் இவைகள் மட்டில் மெய்யான வெறுப்பை அடைந்தருளக் கிருபை புரியும். – ஆமென்.

நற்கிரியை – யாதாமொரு ஒறுத்தல் முயற்சி செய்கிறது.

மனவல்லயச் செபம் – உலகத்தை வெறுத்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

St. Antony Devotion (Day 2) in Tamil

இரண்டாம் நாள்

அர்ச். அந்தோனியாருடைய பிறப்பு

தவத்தினுடையவும் தாழ்ச்சியினுடையவும் உத்தம மாதிரியாயிருந்துவந்த இந்த மகா பெரிய அர்ச்சியசிஷ்டவர் லிஸ்போன் (Lisbonne)’ நகரத்தில் கோத்புரு தெ புய்யோன் (Godefroy a Bouillon) சந்ததியாருடைய அரண்மனையில் 1195-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி பிறந்தார். அவருடைய தாயாரான தெரேஸ் (Dota Theresa) துரைசாளி அஸ்தூரியா (Asturies} தேசத்து இராச குலத்திற் பிறந்தவள். அர்ச். தேவ மாதாவுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட லா சே (La $6) பட்டணத்து தேவாலயத்துக்கு மேற்புறத்தில் அவர் பிறந்த அரண்மனை கட்டப்பட்டிருந்தது.

Saint Antony of Paudua

ஞான மாடப்புறாவைப் போலக் கற்சந்துகளில் இல்லிடந் தேடி, அக்காலத்தில் காடாகவும் தனித்துமிருந்த பிரிவ் (Brive) பட்டணத்தையடுத்த கெபிகளில் (Grosses) வசிக்கப் பிரியங்கொண்டு, பாறையின் ஓரங்களினின்று துளித்துளியாய்க் கசிந்த நீரைச் செட்டா யுதவிக்கொள்ளத் தமது மிருதுவான கரங்களால் . பள்ளந் தோண்டினவர் ராஜ ஐசுவரியத்தினுடையவும் ஆடம்பரத்தினுடையவும் மத்தியில் பிறந்தார்,

பிறந்தவுடனே ஞானஸ்நானத்துக்குக் கொண்டு போகப்பட்டு அச்சமயத்தில் பெர்நாந்தோ {Frenano) என்னும் பெயர் சூட்டப்பட்டார், சிறு பிராயத்தின் பொழுதே உலக ஆஸ்திபாஸ்திகளையும் பெருமை சிலாக்கியங்களையும் காலில் மிதித்து பரலோகத்தையும் நித்தியத்தையும் நாடிச் சேர்ந்த பிறகு அவர் தண்ணீரைக்கொண்டு செய்தருளிய அற்புதங்களில் பிராதனமானவைகளின் குறிப்புகளைக் கல்விழைத்த தகடுகளிலெழுதி அத்தகடுகளால் அவர்  நானஸ்நானம் பெற்றவிடத்திலிருந்த தொட்டியை மூடினார்கள், அவருடைய தாயார் தெரேசாள் தன் கோத்திர மேன்மையினாலும், அழகினாலும் சிறந்திருந்தது போலவே புண்ணியத்தினாலும் சிறந்திருந்தாள். புண்ணியவதியான தாயுடைய பாலுடனும் கொஞ்சுதலுடனும் குழந்தைக்குப் புண்ணிய நடத்தை ஊட்டப்படுகிறதென்கிறார் சாஸ்திரியொருவர், தாயின் மடியிலேயே சேசு மரியெனவும், பிரிய தத்த மந்திரஞ் சொல்லவும் பெர்னாந்தோ கற்றுக்கொண்டார். ‘ஓ மகிமை பொருந்திய ஆண்டவளே” (Hymne 0 Gloriosa Domina.) என்னும் பாடலைக்கொண்டு அவருடைய தாயார் அவரைத் தாலாட்டினாள். சிறு பிள்ளைகள் அழுவதிலும் ஆடுவதிலும் ஓடுவதிலும் காலத்தைக் கடப்பது வழக்கமாயிருக்க, பெர்னாந்தோ என்பவர் செபம் செய்வதிலும், கோயில்களைச் சந்திப்பதிலும், தரித்திரருக்குத் தாராளமான பிச்சை கொடுப்பதிலும் பிரியங் கொண்டார். அர்ச். அந்தோனியாருக்குத் தோத்திரமான பாடலில் சொல்லப்பட்டிருப்பதாவது: “கிறிஸ்துவின் ஊழியரான அந்தோனியாரே, மனங் களிகூரும், உமது சிறு பிராயமுதலே உம்மை நிரப்பின ஆண்டவருடைய கருணையானது மோக்ஷ பாதையை நீர் நாடும்படி செய்தது’ என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ,

வாலிப ஸ்திரிகளே, வாலிபத் தாய்மாரே, சிறு பாலகர் உங்கள் கரங்களிலிருக்கையில் எவ்வளவோ ஆனந்த சந்தோஷமடைகிறீர்கள். உங்கள் பிள்ளைகள் மட்டில் உங்களுக்குண்டான ‘ கடமைகளை நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு முதலில் வேதத்தைப் படிப்பித்து மோக்ஷ வழி காட்ட வேண்டியவர்கள் நீங்களே, அந்த இளகலான மெழுகை உருவாக்குவதும், சேசுமரியென்னுந் திரு நாமங்களை அதில் பதியவைப்பதும் உங்களுடைய கடமையல்லவோ! உங்களிடத்தினின்றல்லவோ, உங்களுடைய மாதிரியைக் கண்டல்லவோ, குழந்தைகள் தங்கள் கரங்களைக் குவித்து செபிக்கவும், சிலுவையடையாளம் வரையவுங் கற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது. உங்கள் குழந்தைகளைத் தேவமாதாவுக்கு ஒப்புக்கொடுத்து அவளுடைய ஆதரவில் வையுங்கள். ஞானஸ்நானம் பெற்ற முதலே அவர்களை அர்ச். அந்தோனியாருடைய அடைக்கலத்தில் ஒப்புவித்து விடுங்கள். சிறு குழந்தையான அந்தோனியாரைப்போல உங்கள் குழந்தைகளும் பிச்சைகொடுக்கும்படி பழக்குங்கள், பிற்காலத்தில் உங்கள் பிள்ளைகள் அவிசுவாசிகள் ஆகக் கூடும். நன்னெறியை விட்டுவிடக்கூடும். ஆனால் அரிசி, அந்தோனியாருடைய ஒத்தாசையால் தங்களுடைய சிறு பிராயத்தில் உங்கள் மடி மேல் வளர்ந்த காலத்தில் தாங்கள் கற்றுக்கொண்ட செபங்களை, கேட்ட புத்திமதிகளை, பார்த்த நன்மாதிரிகளை, தாங்களே செய்துவந்த தர்மங்களை நினைப்பார்கள், நல் வழி திரும்புவார்கள். நீங்கள் இவ்வுலகத்தில் அருமையாய் நேசித்த பிள்ளைகள் மறுவுலகத்திலும் உங்களோடு நித்தியத்துக்கும் வாழும் பாக்கியத்திற் சேர்வார்கள்.

*செபம்*

மகா மகிமை பொருந்திய அர்ச். அந்தோனியாரே, நீர் தேவமாதாவினுடைய ஆதரவிற் பிறந்து, உமக்கு ஐந்து பிராயமாகும் போதே உமது கற்பென்னும் ஒலிப் புஷ்பத்தை அத்திரு மாதாவுக்கு ஒப்புக்கொடுத்தவரே, கல்லிலே உமது விரலாற் பதிக்கப்பட்ட சிலுவையடையாளத்தைக் கொண்டு பசாசை துரத்தினீரே, அத்திரு மாதாவின் மட்டில் உருக்க மான பக்தியையும், நரக சத்துராதிகளின் தந்திரங்களை வெல்ல பலத்தையும் எங்களுக்கு அடைந்தருளும். ஆமென்.