கீழ்ப்படிதல்

Abraham Obeys God by sacrifice his own Son

பேசுகிறவர்கள் நாங்களல்ல, இஸ்பிரீத்துசாந்துவானவரே பேசுகிறவர்.”’ (மாற்கு 13 : 11)

1 கர்த்தருடைய குருவானவருக்குக் கீழ்ப்படிகிறவன் மனிதனுக்கல்ல, “ உங்களுக்குச் செவி கொடுக்கிறவன் எனக்குச் செவி கொடுக்கிறான் ” (லூக். 10:16) என்று திருவுளம் பற்றிய சர்வேசுரனுக்கே கீழ்ப்படிகிறான்.

2 கீழ்ப்படிந்ததினால் ஒருபோதும் ஒரு ஆத்துமமும் மோசம் போனதில்லை, ஆனால் கீழ்ப்படிதலற்ற ஆத்துமமோ இரட்சணியம் அடைந்ததேயில்லை. (அர்ச். பிலிப்புநேரியார்).

3 ” கீழ்ப்படிதலை அசட்டைபண்ணி, தன் சுய புத்தியின் வெளிச்சத்தில் நடந்துகொண்டு, தனக்குள் உண்டாகும் பயத்தினால் புண்ணிய வழியில் விருத்தியடை யாமலிருக்கிறவனைப் பசாசு சோதிக்கவேண்டியதில்லை. அவனே தனக்கு விரோதமாய்ப் பசாசின் அலுவலைச் செய்துகொள்ளுகிறான் ” என்று அர்ச். பெர்நர்துஸ் வசனித்திருக்கிறார்.

4 விவேகமுள்ள ஆத்தும் குருவானவர் நமக்குக் கற்பிக்கும் விஷயங்களில் தவறிப்போவாரென்றும் அல்லது நமது மனச்சாட்சியை அவருக்கு நாம் வேண்டிய மட்டும் தெளிவாய்த் திறந்து காண்பியாததினால் அதின் நிலைமை அவருக்குச் சரிவரத் தெரியாதென்றும் பயப் படாதபடி எச்சரிக்கையாயிருக்க கடவோம், இவ்வித பயத்துக்கு இடங்கொடுப்போமாகில் ஒன்றில் கீழ்ப்படி யாதபடி சூக்ஷமமாய் விலகிக்கொள்வோம், அல்லது கீழ்ப் படிய யோசிப்போம். ஒ, கிறீஸ்துவ ஆத்துமமே, உன். ஆத்தும் குருவானவர் நீ சொல்லுவதை நன்றாய்க் கண்டு பிடியாமலும், உன் ஆத்தும் நிலைமையை நன்றாய் அறியா மலுமிருப்பாராகில், அல்லது நீ உன்னைத்தானே முற்றும் திறந்து காண்பியா திருப்பாயாகில் அவர் உன்னைத் தொடர்ந்து வினாவியிருப்பார். அவர் உன்னை வினாவாவிட்டால், அவர் உன்னைப்பற்றியதையெல்லாம் வேண்டியமட்டும் நன்றாய் அறிந்திருக்கிறாரென்பது நிச் சயம். ஆத்துமாக்களை நடத்துவதில் தமது ஸ்தானத்தி லிருக்கும் குருவானவருக்குச் சர்வேசுரன் ஞான வெளிச்சமும் உதவியும் வாக்களித்திருக்கிறாரே, இது போதாதா ? பரிசுத்த வேதாகமம் கற்பிப்பதுபோல் நீ அவருக்குக் கபடின்றித் தீவிரமாய்க் கீழ்ப்படிவதற்கு இதற்குமேல் என்ன வேண்டியது ?

5 நமதாத்துமம் என்ன நிலைமையிலிருக்கிறதென் பதை நமக்கல்ல, ஆனால் தமது ஸ்தானத்தில் நம்மை நடத்தும்படி வைக்கப்பட்டிருப்பவருக்குச் சர்வேசுரன் அறிவிக்கிறார். ஆகையால் நீ சன்மார்க்கத்தில் ஒழுகிறா யென்றும், சேசுக்கிறிஸ்துவின் கிருபையும் வரப்பிரசாத மும் உன்னிடம் குடியிருக்கிறதென்றும் அக்குருவானவர் வாயினின்று நீ அறிவது போதுமானது. இது விஷயத் தில் மற்றக் காரியங்களில் நீ நடந்துகொள்வதுபோல் அவரை நம்பி, அவருக்குக் கீழ்ப்படிவாயாக. ஏனெனில் ஆத்தும் குருவானவருக்குச் சகலத்திலும் முற்றும் கீழ்ப்படியாதிருப்பது அகங்காரமும் விசுவாசக் குறைச் சலுமாகுமென்று அர்ச். சிலுவை அருளப்பர் வசனித திருக்கிறார்.

6 கிறீஸ்துவனுக்கு எல்லாத்தையும்விடக் கீழ்ப் படிதல் அவசரம். கீழ்ப்ப டிவதினால் அவன் பாவங் கட்டிக்கொள்வதாக அவன் ஆத்துமத்தில் உதிக்கும் வீண் பயத்தைச் சட்டைபண்ணாதிருப்பானாக. முற்றுபே அபாயமற்ற கீழ்ப்படிதலின் மார்க்கத்தில் தத்தளியாமல் உறுதியாய் நடப்பானாக. அர்ச். பெர்நர் துஸ் சொல்லு கிறதாவது : ” ஒழுங்குமுறையோடு நீ கீழ்ப்படிந்து கொண்டிருக்கும்போது, உன் மனச்சாட்சியின் இயல் பான உணர்ச்சிக்கே விரோதமாய் நீ நடக்கிறதாக சில சமயங்களில் பயப்படுவாய்; நீ பாவங்கட்டிக்கொள்ள தாக உனக்குத் தோன்றும். ஆனால் அதற்கு நே விரோதமாய் நீ சர்வேசுரன் சமுகத்தில் பெரும் பேறு பலனைச் சம்பாதித்துக்கொள்ளுகிறாய்.”

7 கீழ்ப்படிதல் என்ற புண்ணியம் நமது வெளிக் கிருத்தியங்களை ஒழுங்குப்படுத்துவதுமட்டும் போதாது நமது புத்தியையும் மனதையுங்கூட நடப்பிக்கவேண்டும் அப்படியே கீழ்படிதலானது கட்டளையிடுவதைச் செய் வதுதான் போதுமென்றிராதே; அதுமட்டும் பற்றாது ஆனால் நீ விசுவசிக்கவும் விரும்பவும் வேணுமென்று அது கற்பிப்பதை நீ விசுவசிக்கவும் விரும்பவும் வேண் டியது. இவ்வுள்ளரங்க சிரவணத்தில்தான் பரிசுத்த கீழ் படிதலின் பேறுபலன் விசேஷமாய் அடங்கியிரு கின்றது.

8 உனது கீழ்ப்படிதல் கபடற்றதும், தீவிரமானதும், பூரணமானதும், கவலை கலக்கமற்றதுமாயிருக்கம் டும்

கபடற்றதாயிருக்கவேண்டியது : ஏனெனில் அது உன்னிடம் கேட்பது நியாயமாவென்று விசாரிக்கலா காது, ஆனால் நான் கீழ்ப்படிவது அவசரம் என்ற இந்த ஓர் நினைவே உன் தீர்மானமாயிருக்கவேண்டியது ; –

தீவிரமானதாயிருக்கவேண்டியது : ஏனெனில் நீ சர்வேசுரனுக்கே கீழ்ப்படிகிறாய்.

பூரணமாயிருக்கவேண்டியது : ஏனெனில் தேவ சட்டத்துக்கு விரோதமற்ற சகலமும் அதனுள் அடங்கி யிருக்கின்றது.

கவலை கலக்கமற்றதாயிருக்கவேண்டியது : ஏனெ னில் சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிகிறவன் பிசகமுடியாது. இந்த ஒரே நினைவு நீ தப்பிதஞ்செய்கிறாய் அல்லது தப் பிதஞ்செய்துவிட்டாய் என்ற பயத்தை அகற்றப் போது மானது.


Devotion to St. Antony in Tamil Day 12

பூர்ஜ் (Bourges} பட்டணத்தில் நடந்த நிகழ்ச்சிகள்

1225-ம் வருஷ முடிவில் நவம்பர் மாதத்தில் பூர்ஜ் பட்டணத்தில் கூடின சங்கத்துக்கு அர்ச். அந்தோனியார் அனுப்பப்பட்டார், அவ்விடத்தில் அவர் ஒருவரையும் அறியாதிருந்தபோதிலும், அந்தப் பட்டணத்து மேற்றிராணியார் பிரிவினைக்காரருக்குச் செவி கொடுத்து விசுவாச சத்தியங்களில் தத்தளித்து, செய்யவேண்டிய கடமைகளை நிறைவேற்றாதிருந்தார் என்று அர்ச்சியசிஷ்டவர் காட்சியினால் அறிந்திருந்தார். ஆனதால் தைரியத்தோடு மேற்றிராணியாரிடத்தில் போய் அவரை நோக்கி: “மேற்றிராணி மகுடந் தரித்தவரே, உம்மிடத்தில் பேசுவதற்காகத்தான் நான் வந்தேன் என்று சொல்லி, அந்த மேற்றிராணியாருடைய இரகசிய குற்றங்களையும், அவர் ஏற்று அநுசரித்து வந்த தப்பறையான கொள்கைகளையும் வெளிப்படுத்தி சுவிசேஷ வாக்கியங்களை எடுத்துரைத்து எவ்வளவு உருக்கமாய்ப் பேசினாரென்றால், மேற்றிராணியார் தன் குற்றங்களைக் கண்டுபிடித்து அவைகளுக்காக மனஸ்தாபக் கண்ணீர் விட்டழுது, சங்கம் முடிந்த பிறகு, அந்தோனியாரைத் தனியே வரவழைத்து மகா தாழ்ச்சியோடு தன் குற்றங்களை வெளிப்படுத்திப் பொறுத்தல் கேட்டார், அது முதல் மேற்றிராணியார் தேவ ஊழியத்தில் பிராமாணிக்கந் தவறாது நடந்து, ஞான முயற்சிகளில் தன் சீவியகாலமெல்லாம் செலவழித்தார்.

      தாம் செய்துவந்த பிரசங்கங்களினால் உண்டான நன்மை பிரயோசனங்களை வியர்த்தமாக்கப் பசாசு பலவிதத்திலும் முயலுவதை அர்ச்சியசிஷ்டவர் அறிந்திருந்தார். ஒரு நாள் திராளான சனங்களுக்கு முன்பாக அவர் பிரசங்கம் செய்த

போது , ஒரு துரைமகள் வெகு கவனமாய் அவர் சொல்லும் அர்தமான வாக்கியங்களைக் கேட்டுக்கொண்டிருக்கையில் காய்மகாரம் பிடித்த பசாசு அவள் கவனத்தைக் கெடுக்க எண்ணி ஒரு மனித வேஷமெடுத்து அவள் கண்களுக்கு முன்பாகத் தோன்றி, கையில் கடிதமொன்றை காட்டி அளுடைய மகன் யுத்தத்தில் எதிரிகள் கையில் அகப்பட்டு அவர்களால் கொலை செய்யப்பட்டான் என்று அறிவித்தது.பசாசு செய்த தந்திர உபாயத்தை அந்தோனியார் காட்சியால் அரிந்து சனங்கள் எல்லோரும் கேட்க உரத்த சத்தமாய்: ‘”சகோதரியே, நீ பயப்படாதே உன் மகன் உயிரோடிருக்கிறாள், (சௌக்கியமாக இருக்கிறான். இந்தத் ஆளோ, பசாசு’ என்றார். அவர் அப்படிச் சொல்லவே அவன் புகையைப்போல மறைந்து போனான்.

அர்ச்சியசிஷ்டவர் செய்துவந்த நன்மைகளைக் கண்ட பேய்கள் கோபங்கொண்டு அவருக்கு நானாவிதத்திலும் விக்கினங்கள் பண்ண முற்பட்டன. லிமோஜ் (Limoges) பட்டணத்தில் ஒருநாள், சன மிகுதியால் வேறு தகுந்த இடம் ஒன்றுமில்லாதிருக்க மைதானத்தில் அவர் பிரசங்கம் பண்ண வேண்டியிருந்த போது, அந்தப் பட்டணத்து மேற்றிராணியாராரும், குருப்பிரசாதிகளும் சனங்களை ஒரு விஸ்தாரமான மைதானத்திற் கூட்டி வந்தார்கள். மேடையின்மேலேறி அந்தோனியார் பிரசங்கந் துவக்கினபோது தெளிவாயிருந்த வானத்தைத் திடீரென மேகங்கள் அடர்ந்து இடியும், மின்னலும், குமுறலும் உண்டானதைக்கண்ட மக்கள் அச்சங் கொண்டு ஓடிப்போக எத்தனிக்கையில், அர்ச்சியசிஷ்டவர் அவர்களை நோக்கி: “ஒருவரும் போக வேண்டாம். மழையைப் பற்றி நீங்கள் பயப்பட வேண்டியதில்லை . எவரையும் மோசம் பண்ணாத சர்வேசுரன் மட்டில் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன். உங்கள் மேல் ஒரு துளித் தண்ணீர் முதலாய் விழாதென்று உங்களுக்கு உறுதியாய்ச் சொல்லுகிறேன்’ என்றார். அவர் சொன்ன பிரகாரமே ஒரு துளி முதலாய் அவர்கள்மேல் விழாதிருக்க, சுற்றிலும் நல்ல மழை பெய்து வெள்ளம் ஓடக் கண்ட சனங்கள் சர்வேசுரனையும் அந்தோனியாரையும் வாழ்த்தினார்கள்.

மற்றொருநாள் அந்தோனியார் ஒரு கோயிலில் பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தபோது, அந்தப் பிரசங்கத்தைக் கெடுக்க, பசாசு பைத்தியக்காரன் ஒருவனை ஏவி விடவே, அவன் அங்குமிங்குந் திரிந்து ஓடி, உரத்த சத்தமாய்ப் பேசி வெகு அலங்கோலம் உண்டு பண்ணினான். அந்தோனியார் அவனை சத்தம் செய்யாதிருக்கும்படி சொன்னார். அப்போது அவன் அவர் இடையிற் கட்டியிருந்த கயிற்றைக் கொடுத்தால் மாத்திரந்தான் அமரிக்கையாயிருப்பதாகச் சொன்னான். அந்தோனியார் தம் இடையில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துக் கொடுக்கப் பைத்தியக்காரன் அதை முத்தமிட்டு தன் நெஞ்சில் அணைக்கவே அவனுடைய பைத்தியம் தெளிந்தது. அவன் அவர் பாதத்தில் விழுந்து தனக்குச் . செளக்கியங் கட்டளையிட்ட கடவுளை வாழ்த்தினான். , தின்மை, செய்யத் தேடின பசாசு நன்மை விளைந்தது கண்டு * வெட்கி ஓடிப்போயிற்று.

-.-.-நமது சீவியகாலமெல்லாம் பசாசு நம்மைத் தன்னுடைய தந்திரங்களுக்கு உட்படுத்துவதற்குத் தேடுகின்றது. ஆனால் சங்கிலியினால் கட்டப்பட்ட நாயைப்போல இருக்கிற படியால், சர்வேசுரனுடைய உத்தரவன்னியில் நமக்குத் தின்மைசெய்யப் பசாசுக்கு வல்லமை இல்லை. ஆனதால் விழித்திருந்து செபம் பண்ணுவோம், அப்போது பசாசின் தந்திரத்துக்கு உள்ளாகமாட்டோம்,

செபம்

அர்ச், அந்தோனியாரே, சகலவித ஆபத்துக்களிலுமிருந்து எங்களைக் காப்பாற்றும்படி உம்மை மன்றாடுகிறோம். நீர் சேசுநாதர் இருதயத்தினிடத்தில் சலுகையுள்ள வராகையால் எங்கள் ஆத்தும் ஆபத்துக்களிலும், சரீர ஆபத்துக்களிலும் எங்களைக் காப்பாற்றத் தயைபபுரியும் காணப்படும் சத்துருக்கள், காணப்படாத சத்துருக்கள், இடி பெருங்காற்று, வெள்ளம், பூமி யதிர்ச்சி, இவை முதலிய ஆபத்துக்களிலிருந்து எங்களைக் காப்பாற்றி, சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கமாய் தாங்கள் வாழியஞ்செய்து நித்திய மோக்ஷானந்தம் சேரும்படி எங்களுக்காக மன்றாடியருளும், – ஆமென்.

நற்கிரியைதரித்திரருக்கு உதவி செய்கிறது.

மனவல்லயச் செபம்பசாசுகளுக்குப் பயங்கரமான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Devotion to St. Antony in Tamil Day 11

அர்ச், அந்தோனியார் புயி பட்டணத்தில்
நடத்தின வரலாறுகள்  


கொஞ்ச நாட்களுக்குள்ளாக, நெடுஞ் சீவியஞ் சீவித்தார்” வேறு வேத புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியத்தை அர்ச். அந்தோனியாரைப்பற்றி நன்றாய்ச் சொல்லலாம். எப்படியெனில் அர்ச். அந்தோனியார் சீவித்த காலம் கொஞ்சமானதானாலும், அவர் அநேக இடங்கள் சென்று ஏராளமான பிரிவினைக்காரரை மனந்திருப்பி எண்ணிறந்த அற்புதங்கள் செய்ததால் வெகு நாள் சீவித்தாரென்றும் சொல்லலாம்.

1225-ம் வருஷம் செப்டம்பர் மாதத்தில் வேலே (Velay) நாட்டில் புயி (Puy) பட்டணத்தின் மடத்துக்கு அர்ச். அந்தோனியார் சிரேஷ்டராக நியமிக்கப்பட்டார், அவ்விடத்தில் சந்நியாசிகளுக்குச் சகலத்திலும் நன்மாதிரிகை தந்து, தமது பொறுமையினாலும், சாந்த குணத்தினாலும் சகலரையும் மடத்து ஒழுங்குப் பிரகாரம் நடத்தி, அவர்கள் புண்ணியத்தில் மேன்மேலும் வளரும்படி செய்து, சகலராலும் (நேசிக்கவும், வணங்கவும் மரியாதை செய்யவும் பட்டு வந்தார்.

சிறிது காலம் மடத்திலிருந்து தமது சகோதரைப் புண்ணிய நன்னெறியில் நிலை நிறுத்தின பிறகு பிரசங்கம் செய்ய ஆரம்பித்து வேலே தேசத்து மலைகளில் ஓடி ஒளிந்துகொண்டிருந்த பிரிவினைக்காரரைத் தேடி அவர்களை மனந்திருப்பினார். ஆனதால் அவருடைய அமிர்தப் பிரசங்கங்களைக் கேட்க நாலா பக்கங்களிலுமிருந்து மக்கள் கும்பல் கும்பலாய் ஓடி வருவார்கள். புயி பட்டணத்தில் அவரிருந்த கொஞ்ச நாட்களுக்குள்ளாக சர்வேசுரனிடத்தினின்று தாம் அடைந்திருந்த தீர்க்கதரிசன வரத்தை இருமுறை வெளிப்படுத்தினார். எப்படியென்றால், அவரிருந்த பட்டணத்தில் துரிமார்க்கனும் அவிசுவாசியுமான ஒரு மனிதனிருந்தான். அவன் பட்டணத்தில் சகலராலும் அறியப்பட்டவன். அப்பேர்பட்டவனை அந்தோனியார் காணும்போதெல்லாம் அவனுக்கு முன்பாக முழங்காலிலிருந்து வணக்கம் செய்து வருவார். இப்படியிருக்க ஒருநாள் அந்த மனிதன் அர்ச். அந்தோனியார் தன்னை வெட்கப்படுத்தி அவமானம் பண்ணு வதற்காக பரிகாசமாக இவ்விதம் செய்து வருகிறாரென்றெண்ணி அவரைப் பார்த்து: “நீ இவ்விதம் செய்யவேண்டிய காரணமென்ன? சர்வேசுரனுடைய தண்டனைகளுக்கு நான் பயப்படாதிருந்தால், உம்மை என்னுடைய ஈட்டியினால் குத்தி உமது உயிரை வாங்கியிருப்பேன்” என்றான். அப்போது அர்ச்சியசிஷ்டவர் ‘என் சகோதரனே, சேசுகிறிஸ்துநாதருக்காக என் பிராணனைக் கொடுப்பதற்கு என் சீவியகால முழுமையும் ஆசித்தேன். என் ஆசை நிறைவேறச் சுவாமிக்குச் சித்தமில்லை போலும். ஆனால் நீர் வேதத்துக்காக உமது இரத்தம் சிந்துவீரென்று எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நீர் உமது இரத்தம் சிந்தி வேதசாக்ஷி முடி அடையும் போது நான் இன்று உமக்குச் சொல்லுகிறதை நினைத்துக்கொள்ளும்” என்றார், அவர் சொன்ன பிரகாரமே அந்த மனிதன் சிறிது நாட்களுக்குள்ளாக மனந்திரும்பி, துலுக்கருடைய இராச்சியத்தில் வேதம் போதிக்கப்போன குருக்களோடு தானும் சென்று அக்கொடியவர்கள் கைகளில் அகப்பட்டு வேதசாக்ஷி முடி பெற்றார்.

உயர்ந்த குலத்திற் பிறந்த துரைமகள் ஒருத்தி தன் பேறுகாலத்தின் போது அநேகமுறை அர்ச்சியசிஷ்டவரிடத்தில் போய் அவர் தனக்காக வேண்டிக் கொள்ளும்படி கேட்டாள். அர்ச்சியசிஷ்டவர் அவளை நோக்கி நீ நம்பிக்கை யாயிருந்து சந்தோஷப்படு. ஏனெனில் நீ ஒரு குழந்தை பெறுவாய், அவர் திருச்சபையில் பெரியவராவார். அர்ச். பிரான்சிஸ்கு சபையில் உட்பட்டு அவரும் அவர் சொல்லும் புத்தியால் இன்னும் அனேகரும் வேதசாட்சி முடி அடைவார்கள் என்றார். அவர் சொல்லிய வண்ணம் குழந்தை பிறந்து அர்ச். பிரான்சிஸ்கு சபையில் உட்பட்டுக் கடைசியாய் அநேகம் பேர்களோடு துலுக்கர் கையில் அகப்பட்டு வெகுவாய் உபாதிக்கப்பட்டு வேதசாட்சி முடி அடைந்தார்.

அர்ச், அந்தோனியாரைப்பற்றி எழுதப்பட்டிருப்பது என்னவெனில்: ‘ஓ அந்தோனியாரே, உன்னதமான மகிமையாய் உம்மிடத்தில் தீர்க்கதரிசன வரம் விளங்கினதைப் பற்றி மனங்களிகூரும், சர்வேசுரனுடைய தேவ இஷ்டப் பிரசாதத்தினால் நிரப்பப்பட்டிருந்ததினாலல்லவோ, தீர்க்கத்தரிசனங்களை அருளினீர்” என்று எழுதப்பட்டிருக்கின்றது.

சர்வேசுரன் அர்ச். அந்தோனியாருக்குத் தந்தருளின தீர்க்கத்தரிசன வரத்தைக்கண்டு நாம் ஆச்சரியப்பட்டு அவருக்கு நன்றியறிந்த தோத்திரங்கள் செலுத்தி அர்ச். அந்தோனியாருடைய புண்ணிய மாதிரியைத் தாழ்ச்சியுடன் பின்பற்றி நடக்கக் கடவோம்.

செபம்

சிலுவையில் அறையப்பட்டுத் தமது இரத்தமெல்லாம் ஐந்து காயங்கள் வழியாய் மனிதர் இரக்ஷணியத்துக்காகச் சிந்தின சேசுநாதரைப் பற்றி உம்முடைய இரத்தத்தையும் சிந்தி வேதசாட்சி முடியடைய ஆசைப்பட்டவரான அர்ச். அந்தோனியாரே, அபாத்திரரான அடியோர்களுடைய பாவங்கள் சேசுநாதசுவாமி சிந்தின திரு இரத்தப் பலன்களால் பரிகாரமாகும்படி அவரை மன் றாட உம்மைப் பிரார்த்திக்கிறோம். – ஆமென்.

நற்கிரியைஒரு ஒறுத்தல் முயற்சி செய்கிறது.

Devotion to St. Antony in Tamil (Day 10)

13-ம் நூற்றாண்டில் அல்பிஜூவா (Albigeois) என்னும் பிரிவினைக் காரரை எதிர்த்த அர்ச்சியசிஷ்டவர்கள் அர்ச். கன்னிமரியாயின் கொடியை விரித்து அந்தக் கொடியின் கீழ் சத்துருக்களோடு போராடிச் செயங் கொண்டார்கள். பசாசின் தலையை நசுக்கினவள் பிரிவினைக்காரருடைய பயங்கரமாய் எப்போதும் இருந்தாள் என்பதற்குச் சந்தேகமில்லை, அர்ச். பிரான்சிஸ்கு தமது சபையில் சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மாதாவின் மட்டில் விசேஷமான பக்தி விளங்கும்படி செய்துவந்தார். அர்ச். அந்தோனியார் இன்னும் ஒருபடி மேலே தேவமாதாவினுடைய மகிமையைப் பிரசித்தப்படுத்தினார். தேவமாதாவினால் விசேஷமான விதமாய்த் தெரிந்து கொள்ளப்பட்ட அவர், தேவமாதா மோட்சத்துக்கு எழுந்தருளிப்போன திருநாளன்று பிறந்த அவர், தேவமாதா சரீரத்தோடும் ஆத்துமத்தோடும் மோட்சத்துக்கு எழுந்தருளிப் போனாள் என்பது இன்னமும் திருச்சபையில் வேத சத்தியமாகப் பிரசித்தப்படுத்தப்படாதிருந்தபோதிலும் அது திருச்சபை பரம்பரையால் எப்போதும் விசுவசிக்கப்பட்டு வந்ததென்று நிரூபிக்கத் தேடினார். அர்ச். அந்தோனியார் அதை வேத சத்தியமாக விசுவசித்து வந்தார். ஆனால் அர்ச். பிரான்சிஸ்கு சபையாரால் வேத சத்தியமாக எண்ணப்படாதபடியால் அர்ச். அந்தோனியார் தேவமாதா மோட்சஷத்துக்கு எழுந்தருளிப்போன திருநாளன்று அவளை நோக்கி: “ஓ மகிமை பொருந்திய ஆண்டவளே’ என்னும் கீர்த்தனையைப் பக்தி உருக்கத்தோடு செபித்தபோது, பரிசுத்த கன்னிமரியம்மாள் மகா மகிமைப் பிரதாபத்தோடு அவருக்குக் காட்சி தந்து தாம் ஆத்துமத்தோடும் சரீரத்தோடும் மோக்ஷத்துக்கு எழுந்தருளிப் போனது உண்மையென்று அறிவிக்கத் திருவுளமானாள்.

அர்ச். கன்னிமரியம்மாளுடைய மகிமை முடியில் இந்த விசேஷ மகிமையையும், சர்வேசுரன் திருச்சபையைக் கொண்டு, அவள் சென்மப் பாவமில்லாமல் உற்பவித்த சத்தியத்தை 9-ம் பத்திநாதர் என்னும் பாப்பானவர் 1854 ம் வருஷத்தில் ஆடம்பரமாய் ஸ்தாபித்து, விளம்பரம்  பண்ணினது போல, இப்போது மகா பிரபலியத்தோடுதிருச்சபையை ஆண்டுவரும் பாப்பானவருடைய வாயினால் ஸ்தாபித்து விளம்பரம் பண்ணத் தயை கூறும்படி வேண்டிக்கொள்ளக்கடவோம். ஏற்கனவே இப்போது திருச்சபையை ஆண்டுவரும் பாப்பானவரும் இந்தச் சத்தியத்தைப் பிரசித்தப்படுத்து வாரென்று அநேகர் எண்ணியிருக்கிறார்கள். அர்ச், அந்தோனியார் தேவமாதாவின் மட்டில் எப்போதும் விசேஷ பக்தி பற்றுதலாயிருந்தார். தம்முடைய அவசரங்களில் எப்போதும் அவருடைய ஒத்தாசையை மன்றாடுவார். தம்முடைய யாத்திரைகளில் அவளுடைய அதி தோத்திரங்களைப் பாடுவார்.

அர்ச், அந்தோணியாருக்குத் தேவமாதா ‘பரலோக வரங்கள் நிறைந்த கணவாய், ‘பரம இரகசியமான திராட்சைக்கொடி, ‘அடைபட்ட கதவு‘ “தேவ வரப்பிரசாதத் தினுடையவும், கீழ்ப்படிதலினுடையவும், தாழ்ச்சியினுடை யவும் வீடு,’ “அடைக்கலப்பட்டணம்,” “சர்வேசுரனுடைய சிம்மாசனம்,’ இவ்விதமான மகிமை பொருந்திய பட்டங்கள் தரித்த ஆண்டவளாயிருக்கிறாள்.

மெய்யாகவே அர்ச், அந்தோனியார் செய்த பிரசங்கங்களிலெல்லாம் அர்ச், தேவ மாதாவைக் குறித்துப் பேசினார். ஆபத்திலோ, அவசரத்திலோ, சங்கடங்களிலோ எப்போதும் அந்தோனியார் தேவமாதாவினுடைய அடைக்கலத்தை நாடிப்போவார். அவர் மரணத் தருவாயில் “ஓ மகிமை பொருந்திய ஆண்டவளே, என்னும் வேண்டுதலைச் சொன்னபோது தேவமாதா அவருக்குத் தரிசளையாகி ஒத்தாசை செய்ததாளல்லவோ, தாம் அந்தச் சமயத்தில் தேவமாதாவை மாத்திரமல்ல, தன் சர்வேசுரனையும் பார்க்கிறதாகச் சந்நியாசிகளிடம் சொல்லிப் பாக்கியமான மரணமடைந்தார்.

அர்ச், தேவமாதாவை நாம் நோக்கி “நல்ல ஆதரவு மாதாவே (Notre-Dame da Bon Secours)” என்று சொல்லும்போது அவள் நமது மட்டில் விசேஷ பிரியங் கொள்ளுகிறாள். பாவிகளுக்கு அடைக்கலமாயிருக்கிற மாதாவை, கஷ்டப் படுகிறவர்களுக்குத் தேற்றரவாயிருக்கிற மாதாவை நாம் நோக்கி மன்றாடும்போது, நம்முடைய அவசரங்களில் அத்திரு மாதா நமக்கு ஒத்தாசை செய்கிறாள்.

செபம்

பரலோக பூலோக இராக்கினியான அர்ச். (தேவமாதாவின்மட்டில் உமக்குள்ள பக்தியினால் உமது சீவியகாலமுழுமையும் விளங்கி, உமது மரண சமயத்தில் அவளுடைய தரிசனை அடையப் பாத்திரமான அர்ச். அந்தோனியாரே, பாவிகளாகிய நாங்களும் உமது நன்மாதிரியைப் பின்பற்றி அந்தத் திவ்விய மாதாவின் மட்டில் பக்தி வைத்து அவளுடைய உபகார சகாயங்களை அடையக் கிருபை செய்தருளும். -ஆமென்.

நற்கிரியை – தேவமாதாவைக் குறித்து ஒருசந்தி இருக்கிறது.

மனவல்லயச் செபம் – மோட்ச இராக்கினியின் பிரிய தாசனான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Devotion to St. Antony in Tamil (Day 9)

ஒன்பதாம் நாள்

பிரஞ்சுராச்சியத்தில் அர்ச். அந்தோணியார் நடத்தின காரியங்கள் 

   பக்திச் சுவாலகருக்கொப்பான அர்ச், பிராஸ்சிஸ்கு அசிசியார் தம்முடைய பக்தியுள்ள தாயார் பிக்கா  அம்மாள் (Pica) பிரோவான்ஸ் (Provence) நாட்டிற் பிறந்ததினிமித்தம் பிரஞ்சு தேசத்தின்மட்டில் எப்போதும் விசேஷப்பிரியப் பற்றுதலாயிருந்தார். ஆனதினால் அவர் தம்முடைய சபையில் சேர்ந்த சந்நியாசி குருக்கள் வேதம் போதிக்க ஏற்பட்டபோது அவர்களை மற்றப் பிரதேசங்களுக்கு அனுப்பிவிட்டுத் தாம் பிரஞ்சு தேசத்தைத் தெரிந்து கொண்டு, அவ்விடம் மஸ்ஸேயோ (Masteo} என்னுஞ் சகோதரரோடு செல்ல எத்தனிக்கையில், சபையை நடத்த அவர் இத்தாலிய தேசத்திலேயேயிருக்கவேண்டியது அவசியமென்று அர்ச். பாப்பானவருடைய ஸ்தானாபதி அவரைக் கேட்டுக்கொண்டதால், தமக்குப் பதிலாய் தமது சபையின் இரத்தினத்தைப் போலிருந்த அர்ச். அந்தோனியாரை அவ்விடம் அனுப்பிவைத்தார், அர்ச். அந்தோணியார் பிரஞ்சு தேசத்தின் தென்பாகம் சென்று மோம்ப்பெல்லியே (Montpellie) மடத்தில் வாசம் செய்து வந்தார்,

    அவ்விடத்திய பிரிவினைக்காரருடைய தப்பறைகளையும், அவர்கள் செய்து வந்த தந்திர உபாயங்களை யும் நன்றாய் கண்டுகொண்டு தமது தெளிவான பிரசங்கங்களினால் அவைகளை வெளிப்படுத்திப் பிரிவினைக் காரருக்குப் பயங்கரம் வருவித்ததினால் ‘பதிதருடைய சம்மட்டி” என்கிற பெயர் அவருக்கு உண்டாயிற்று. ஆதலால் அவர்களில் திரளான குருப்பிரசாதிகளுக்கு முன்பாகவும், சனங்களுக்கு முன்பாகவும் பிரசங்கம் பண்ணின போது , அதேசமயத்தில் தம்முடைய மடத்துக்கோயிலில் ஒரு வாசகம் பாடவேண்டியிருந்ததென்று அவருக்கு ஞாபகம் வந்ததால், தம்முடைய தலை முக்காட்டை எடுத்து மூடிக்கொண்டு கொஞ்சநேரம் மௌனமாயிருந்தார், அந்த க்ஷணத்திலேயே தமது மடத்துக் கோயிலில் தோன்றிப் பாடலை  முடித்து, பிறகு மேற்றிராசனக் கோயிலில் துவக்கியிருந்த பிரசங்கத்தைத் தொடர்ந்து செய்தார், இது ‘ஓருடல், ஈரிடம்’ எனும் புதுமையாகும.

    மடத்திலிருந்த சகோதரர் தாங்கள் தியானம் செய்கிறபோதும் செபம் செய்கிறபோதும் பக்கத்துக் குளத்திலிருந்த தவளைகள் சத்தம் செய்தபடியால் சகோதரர் முறைப்படுவதை அறிந்த அந்தோனியார் தவளைகளுக்குக் கட்டளையிடவே அவைகள் மெளனமாயின. வேறு குளங்களிற்கொண்டு போய் விடப்பட்டால், அவைகள்  சத்தம் செய்யும். ஆனால் அந்தோனியார் குளம் என்று அதுமுதல் அமைக்கப்பட்ட குளத்தில் விடப்பட்டாலோ, அவை சத்தம் செய்வதில்லை.

    லுனேல் (Lunel) என்னும் பட்டணத்தில் விஸ்தாரமான ஒரு மைதானத்தில் திரளான சனங்களுக்கு முன்பாகப் பிரசங்கம் செய்தபோது, சுற்றிலும் உண்டான குளங் குட்டைகளிலிருந்த பிராணிகளெல்லாம் நரக சத்துருவால் தூண்டப்பட்டு காதுகள் அடைத்துப் போகும்படியான சத்தம் செய்ய அர்ச்சியசிஷ்டவர் அவைகளை  அதட்டி மெளனமாயிருக்கச் செய்தார்.

     எந்த வேலை செய்தபோதிலும், எவ்வளவு அற்புதமான புதுமைகளைச் செய்து வந்தபோதிலும் அர்ச். அந்தோனியார் தமது மடத்தின் ஒழுங்குகளை அதுசரிக்கிறதில் வெகு பிரமாணிக்கராயிருந்தார், கீழ்ப்படிதல் என்னும் புண்ணியம் அவரிடத்தில் விசேஷமான பிரகாரம் விளங்கிற்று. அற்ப காரியங்க ளானாலும், அவைகளை நுணு நுணுக்கமாய் அநுசரித்து வந்தார். கீழ்ப்படிதலினிமித்தம் ஒழுங்கு தவறாதிருக்கவேண்டி இரண்டு ஸ்தலங்களில் இருக்கும்படி சர்வேசுரன் கிருவை செய்தார், இன்னமும் அர்ச்சியசிஷ்டவர் செய்துவந்த அநேக அற்புதங்களைக்கொண்டு மடத்துச் சந்நியாசிகள் அவருக்கு வெகு வணக்க மரியாதை  செலுத்தி வந்தார்கள்.

நாம் செய்து வருங் திருத்தியங்களெல்லாம் பிரமாணிக்கத்தோடும்நல்ல மனதோடும்ஒழுங்காயும் செய்தோமேயானால் அக்கிருத்தியங்கள் வெகு சொற்ப மானாலும் ஆண்டவருக்கு மிகவும் பிரியமானவையும் நமது ஆத்துமங்களுக்குப் பிரயோசனமானவையுமாயிருக்கு மென்பதற்குச் சந்தேகமில்லை.

     ஒன்பதாம் பத்திநாதர் என்னும் அர்ச். பாப்பானவர் பிரஞ்சு தேசத்தின் இரணியத்துக்காகச் செபித்த செபம்

     ஓ மரியாயே, சென்மப் பாவமில்லாமல் உற்பவித்தவளே, பிரஞ்சு தேசத்தைக் கண்ணோக்கிப் பாரும், பிரஞ்சு தேசத்துக்காக வேண்டிக்கொள்ளும், பிரஞ்சு தேசத்தை இரட்சியும். எவ்வளவுக்கு அதிக குற்றவாளியாயிருக் கின்றதோ, அவ்வளவுக்கு உம்முடைய ஒத்தாசை அதற்குத் (தேவையிருக்கின்றது. உமது கரங்களில் நீர் ஏந்தியிருக்கும் சேசுநாதரிடத்தில் நீர் ஒரு வார்த்தை சொல்லுவிரேயானால், பிரஞ்சு தேசம் இரட்சிக்கப்படும். தேவமாதாவுக்கு எப்போதும் கீழ்ப்படிதலுள்ள சேசுநாதரே, பிரஞ்சு தேசத்தை இரட்சியும் – ஆமென்சேசு.

நற்கிரியை – பிரிவினைக்காரருக்குப் புத்தி சொல்லுகிறது.

மனவல்லயச் செபம் – பிரிவினைக்காரரை மனந் திருப்பின அர்ச்.  அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Devotion to St. Antony in Tamil Day 8

அர்ச். அந்தோனியார் வெர்சேயில் பட்டணத்தில் தபசு காலத்தின்போது பிரசங்கம் செய்து வருகையில் அவ்விடம் வேத சாஸ்திரத்தில் தேர்ந்தவரும் புண்ணியத்தில் சிறந்தவருமான மடாதிபதி ஒருவர் இருந்தார். அவர் சாஸ்திரியான தோமாஸ் கால்லோ என்று அனேகர் என்னுகிறார்கள். அர்ச். அந்தோனியார் வேத காரியங்களையும் தேவ சிநேகத்தையும் பற்றி அந்த மடாதிபதியுடன் வெகுநேரம் சம்பாவித்து வருவார். இருவரும் சுவாமியைப் பற்றி ஒருவரொருவரை நேசித்து வந்தார்கள், அந்த மடாதிபதி அர்ச். அந்தோனியாருடைய கல்வித் திறமையையும், அவருடைய புண்ணியங்களையும் மெத்தவும் புகழ்ந்து பேசி அவர் உள்ளத்தில் தேவ சிநேகாக்கினியினால் பற்றி எரிந்து வெளியில் அந்தத் தேவ சிநேகாக்கிளனியின் கதிர்களை வீசினாரென்று எழுதி வைத்திருக்கிறார்.

இருவரும் பரலோகத்திலிருக்கும் ஒன்பது விலாச சபை சம்மனசு களைக் குறித்துப் பேசுவதில் பிரியங்கொள்ளுவார்கள், அந்தோனியார் அச்சமயத்தில் அவர்களைத் தம்முடைய கண்களால் பார்ப்பதுபோல ஒவ்வொரு சபை சம்மனசுகளுடைய அழகையும், திறமையையும், மற்றக் குணங்களையும் குறித்துப் பேசினதாக மடாதிபதி சொல்லியிருக்கிறார்.

அர்ச். அந்தோனியார் பலவிடங்கள் சென்று வேதத்தைப் பிரசங்கித்த பிறகு மரிக்கிறதுக்குக் கொஞ்ச காலத்துக்கு முந்தி திரும்பவும் வெர்சேயில் பட்டணம் வந்து தம்முடைய சிநேகிதரான மடாதிபதியைச் சந்தித்து அவரிடம் ‘ மறுவுலகத்தில் இருவரும் சந்திப்பதாகச் சொல்லி விடை பெற்றுப்போனார். ஆனால் அர்ச். அந்தோனியார் மரித்த சமயத்தில், தொண்டை நோயால் மிகவும் உபாதைப்பட்டுக் கொண்டிருந்த வெர்சேயில் மடத்து மடாதிபதி அர்ச். அந்தோனியார் மலர்ந்த முகத்தோடு தம்முடைய அறைக்குள்எாக வந்ததைக் கண்டார். மேலும் அந்தோனியார் அவரை நோக்கி: என்னுடைய கழுதையைப் பதுவா பட்டணத்தில் விட்டு விட்டேன். இப்போது என்னுடைய சொந்தத் தேசம் போகிறேன்’ என்று சொல்லி, பிறகு நுனிவிரலால் மடாதிபதியினுடைய தொண்டையைத் தொட்டு அவரைச் செளக்கியப்படுத்தி மறைந்து போனார். மடாதிபதி அந்தோனியாரை மற்றவர்கள் யாராவது பார்த்தார்களோவென்று விசாரிக்க, இல்லையென்றறிந்து, அவர் தமக்குக் காட்சிதந்த தேதியும், நேரமுங் குறித்து வைத்து, கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அதே தேதியிலும் நேரத்திலும் அந்தோனியார் பதுவா பட்டணத்தில் மரித்ததாகச் கேள்விப்பட்டார்,

நமது திவ்விய இரட்சகரான சேசுநாதசுவாமிக்குப் பிரிய சீடர் ஒருவர் இருந்தது போல், அர்ச். அந்தோனியாருக்கும் சந்நியாசிகளில் பிரிய சீடர் ஒருவர் இருந்தார், அவர், வேதம் போதிக்க எங்கும் போனபோது அவரோடு எப்போதும் சென்ற லுக் பெல்லூதி (Luc Beliudi) என்னும் சகோதரர்தான், இந்தச் சகோதரர் கடைசி காலம் வரைக்கும் அர்ச். அந்தோனியாரோடு இருந்து அவர் செய்து வந்த தபசு, புண்ணியங்கள், புதுமைகள் இவைகளுக் கெல்லாம் சாட்சியாயிருந்தது மல்லாமல் அர்ச். அந்தோனியார் சாகுந் தருவாயிலும் அவருடன் இருந்து அவர் அடக்கம் பண்ணப் பட்ட கல்லறையைக் காத்து வந்தார். அவ்விடத்தில் நடந்த ஆச்சரியமான புதுமைகளைக் கண்டு மகிழ்ந்தார். பதுவா பட்டணம் நிஷ்டூரனான எஸ்லினோ (Ezzelino) துரையினுடைய கையிலகப்பட்டு அக்கொடியன் அந்தப் பட்டணவாசிகளைப் பிடித்து அநேக உபாதைகள் படுத்திக் கொலை செய்து வந்ததைக் கண்ட சகோதரர் 1256-ம் வருஷம் ஒரு நாள் இராத்திரி பதுவா பட்டணத்தின் மட்டில் இரக்கம் வைத்துக் காப்பாற்ற வேண்டுமென்று அர்ச், அந்தோனியாரை மன்றாடினபோது, அவருடன் மடத்துச் சிரேஷ்டரான பார்த்தேலேமி கார்ராதினோ (Barthelemy carradino) என்பவரும் இருக்க, அவர்களிருவருக்கும் தெளிவாய்க் கேட்கப்பட்டதென்னவெனில் “சகோதரனே, துன்பத்துக்கு உன்னைத்தானே கையளிக்காதே, ஏனெனில் என்னுடைய திருநாளின்போது பதுவா பட்டணம் சத்துராதிகளின் கொடுமையினின்று மீட்கப்பட்டு, செழிப்பும் கீர்த்தியும் மகிமையும் அடையும்’ என்று கேட்கப்பட்டது. லுக் பெவ்லூதி சகோதரர் மரித்து தனது உத்தம் சிநேகிதருடைய பக்கத்தில் அடக்கம் பண்ணப்பட்டிருக்கிறார்.  சர்வேசுரனைப்பற்றி அவரிடமாய், நாம் புறத்தியாரை நேசிக்கும் போது சர்வேசுரன் நம்முடைய நேசத்தை ஆசீர்வதித்து நமக்கும் நம்மால் நேசிக்கப்பட்டவர் களுக்கும் அநேகவித ஒத்தாசை செய்தருளுகிறார்.

செபம்

மகா நேசத்துக்குரிய அர்ச், அந்தோனியாரே, சர்வேசுரனைப்பற்றிப் புறத்தியாரை நேசித்து அவர்களிருதயத் திலும் உமதிருதயத்தில் பற்றி எரிந்த தேவ. சிநேகம் விளங்கும்படி செய்தருளினீரே, நாங்களும் சர்வேசுரனைப் பற்றி மாத்திரம் எங்கள் புறத்தியாரையும் நேசிக்கும்படி கிருபை செய்தருளும். -ஆமென்.

நற்கிரியை – சர்வேசுரனைப் பற்றிப் பிறரை நேசிக்கிறது.

மளவல்லயச் செபம்பிறர் சிநேகம் நிறைந்த அர்ச், அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Devotion to St. Antony in Tamil (Day 7)

ஏழாம் நாள்

அர்ச்அந்தோனியாருடைய பிரசங்கம்

        1222 ம் வருஷம் மார்ச்சு மாதத்தில் மோந்த்தே பாவோலோ மடத்துச் சந்நியாசிகளும் அந்தோனியாரும் வேறு சில பிரசங்கி சகோதரர் (Frores Pruheur} எனப்பட்டவர்களோடு போர்லி {Fort) பட்டணம் போக நேரிட்டது. அவ்விடத்து மேற்றிராணியாரால் சிலர் பட்டம் தரிக்கப்பட வேண்டியிருந்தது. பட்டம் கொடுக்கும் தினத்தில் மோந்த்தே பாவோலோ மடத்துச் சிரேஷ்டர் பிரசங்கம் செய்வதற்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த போதிலும் ஏதோ ஓர் காரணத்தை முன்னிட்டு தனக்குப் பதிலாய்ப் பிரசங்கம் செய்யும்படி பிரசங்கி சகோதரரைக் கேட்டுக் கொண்டார். என்ன காரணத்தாலோ அவர்களும் சம்மதிக்காதபோது சிரேஷ்டர் இஸ்பிரீத்து சாந்துவினால் ஏவப்பட்டு அர்ச், அந்தோனியார் அந்தப் பிரசங்கத்தை செய்யும்படிக்குக் கீழ்ப்படிதலின் பேரில் கட்டளையிட்டார்.  முதலில் அர்ச்சியசிஷ்டவர் அதிசயப்பட்டுக் கலக்கங் கொண்டாலும், கீழ்ப்படிய வேண்டி மேற்றிராணியாரின்  ஆசிர்வாதம் பெற்று பிரசங்க மேடை ஏறி “கிறிஸ்துவானவர் நமக்காக மரணமட்டும் கீழ்ப்படிந்தார்” என்னும் அப்போஸ் தலருடைய வாக்கியங்களைச் சொல்லிப் பிரசங்கத்தை ஆரம்பித்தார். தாழ்ச்சி நிறைந்த அந்தோனியார் துவக்கத்தில் அஞ்சினாற் போல சாதாரணமாய்ப் பேசினபோதிலும், வரவர, பேசப்பேச வாய்ச்சாலக மிகுந்த, கேட்டவர்கள் அதிசயிக்க, தாம் கொண்ட கருத்தை பலவிதமாய் விளக்கி வியாக்கியானஞ் செய்ய, அங்கிருந்தவர்களெல்லோரும் ஆச்சரியப்பட்டு ஆனந்த வெள்ளத்தில் முழ்கி அது வரையிலும் அப்பேர்ப்பட்ட பிரசங்கங் கேட்டதேயில்லை எனச் சொல்லும்படி ஆனார்கள். அன்றுமுதல் அர்ச், பிரான்சிஸ்கு சபையார் அந்தோனியாருடைய சாஸ்திரத் திறமையையும், வாய்ச்சால்கத்தையும் அறிந்ததால் அவரை மதித்து பெருமைப்படுத்தினார்கள். இது சங்கதியைச் சிரேஷ்டர் அர்ச். பிரான்சிஸ்குவுக்கு அறிவித்து, அர்ச், அந்தோனியார் பிரசங்கம் செய்வதற்கு தயாரிப்பாகும் படி அவருக்குக் கட்டளையிட்டார். சிரேஷ்டர் இட்ட கட்டளையை அர்ச், பிரான்சீஸ்கு அங்கீகரித்ததோடுகூL. அவர்தாமே’ அர்ச். அந்தோனியாருக்கு எழுதினதென்னவெனில், ‘என் மிகவும் பிரிய சகோதரர் அந்தோனியாருக்கு, பிரான்சிஸ்கு சகோதரன் நமதாண்டவராகிய சேசு கிறிஸ்து நாதரிடத்தில் வந்தனம்; நம் சகோதரருக்கு வேத சாஸ்திரம் நீர் கற்றுக்கொடுப்பது நலமென்று தான் காண்கிறேன், தியானத்தின்மட்டிலுள்ள பிரியம் உம்மிடத்திலும் மற்றவர் களிடத்திலும் குறையாதபடிக்கு கவனித்துப் பார்த்துக் கொள்ளும். நாம் அனுசரித்து வரும் ஒழுங்குக்குத் தகுந்தாற்போல இந்த விஷயத்தைப்பற்றி எல்லோரும் கவனிக்கும்படி நான் மிகவும் ஆசிக்கிறேன். வந்தனம்’  என்று எழுதினார்

பொலோஞா பட்டணத்து மடத்தில் பிரான்சிஸ்கு சபை சந்நியாசிகளுக்கு அந்தோனியார் வேத சாஸ் திரங்களைக் கற்றுக்கொடுத்து வந்தார். கொஞ்ச காலத்துக்குள்ளாக அவருடைய கல்வித் திறமையும் வாய்ச்சாலகமும் எங்கே பார்த்தாலும் பிரபலியமாய்ப் பரவியதால் வெகு தாரத்தினின்றும் மாணாக்கர் திரளாய் வந்து சேர்ந்தார்கள். அதன் பிறகு முறையே துலூஸ் பட்டணத்திலும், பொலோனாவிலும், பதுவா பட்டணத்திலும் வேத சாஸ்திரங் கற்பித்து வந்தார். ஆனால் அவர் இவ்வளவு திறமையோடு வேத சாஸ்திரங்களைக் கற்பித்து வந்தபோதிலும், சர்வேசுரன் அவரைக்கொண்டு, அநேகமாயிரம் பாவிகளை மனந்திருப்பச் சித்தமானதால், அவருடைய வாக்குசாதுரியத்தோடு அற்புதங்களைச் செய்யும் வரத்தையும் தந்தருளினார். ஆனதால் ‘புதுமைகளை விதைக்கிறவர்’ என்கிற பெயர் அவருக்கு உண்டாகிறதுக்குப் பாத்திரமானார், மேற்சேயில் (Mercal) என்னும் பட்டணத்தில் அர்ச். எவுசேபியாருடைய விஸ்தாரமான கோயிலில் 1124-ம் வருஷம் தபசு காலத்தில் அர்ச். அந்தோனியார் திரளான சனங்களுக்கு முன்பாகப் பிரசங்கித்துவந்தபோது, அழுகைக் கூச்சலும் புலம்பலுங் கேட்கப்பட்டு பிரசங்கத்தை நிறுத்த வேண்டியதாயிற்று. அடுத்த கோயிலில் மரித்த ஒரு வாலிபனை அடக்கம் செய்கிறதுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். நாயிம் பட்டணத்து விதவையினுடைய வியாகுலத்தைக் கண்ட சேசுநாதர் மனமிரங்கி மரித்த அவள் குமாரனை உயிர்ப்பித்தது போல, அர்ச். அந்தோனியாரும் மனதிளகி பிரசங்கத்தை நிறுத்தி, சிறிதுநேரம் பக்தி உருக்கத்தோடு வேண்டிக்கொண்டு, உரத்த சத்தமாய் மரித்த வாலிபன் உயிர்த்து நடக்கும்படி கட்டளையிட்டார். பார்த்திருந்தவர்கள் அதிசயிக்க உடனே வாலிபன் எழுந்து நடந்தான். பிறகு அர்ச்சியசிஷ்டவர் பிரசங்கத்தைத் தொடங்கி முடித்தார். அவரிடத்தில் சர்வேசுரன்மட்டில் இருந்த விசுவாசமும் நம்பிக்கையும் நம்மிடத்திலுண்டாக அந்தோணியார் கிருபை செய்ய அவரை மன்றாடக்கடவோம்.

செபம்

* அர்ச். அந்தோனியாரே, உமக்குத் தாழ்ச்சியின் மட்டில் இருந்த ஆசையினாலும், உம்மைத்தானே மறைத்து ரிச வேலைகளை நீர் வெகு பிரியமாயய்ச் செய்து வந்தபோது சர்வேசுரன் உமது அர்ச்சியசிஷ்டத் தனத்தையும் கல்வித் திறமையையும் பிறருக்கு வெளிப்படுத்தி அவரால் உயர்த்தப்படப் பாத்திரமானீரே, அடியோர்களும் அந்த மேலான புண்ணியத்தை அநுசரித்து வரும்படி கிருபை செய்தருளும். ஆமென்.

நற்கிரியைவேதத்துக்கடுத்த காரியங்களைப் படிக்கிறது.


மனவல்லயச் செபம் – மரித்தவர்களை உயிர்ப்பித்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

Devotion to St. Antony in Tamil (Day 6)

ஆறாம் நாள்

மோந்ததே பாவோலோ மடத்தில் நடந்த வரலாறு

பாவிகளை மனந் திருப்புவதற்கும், பிரிவினைக்காரரை வெட்கப்படுத்திக் கலங்க அடிக்கிறதற்கும் அர்ச். அந்தோனியாரைத் தெரிந்துகொண்ட கடவுள், கொஞ்ச காலம் அவர் தனிவாசத்திலும் தாழ்மையிலும் இருக்கும்படி சித்தமானார்,

அர்ச், அந்தோனியார் மோந்த்தே பாவோலோ மடம் சேர்ந்தபோது சமையற் சாலையில் தரைகளையும், சமையல் பாத்திரங்களையும் கழுவுகிற வேலையையும், கூட்டிச் சுத்தம் பண்ணுகிற வேலையையும் தமக்குக் கொடுக்கவேண்டுமென்று சிரேஷ்டரை மன்றாடி அந்தத் தாழ்மையான வேலைகளை மகா சுறுசுறுப்போடு செய்து வந்தார். சகோதரர் ஒருவர் அருகிலிருந்த ஒரு கெபியில் ஒரு சிறு குடிசை கட்டிருந்தார், அந்தக் குடிசையை அந்தோனியார் பார்த்தபோது அதைத் தனக்குக் கொடுத்து , விடச் சகோதரரை மன்றாடி, அவருடைய சம்மதத்தின் பேரில் நடுச் சாமத்துச் செபத்துக்குப் பிறகு அந்தோனியார் அந்தக் குடிசைக்குள் போய் செபத்தியானம் பண்ணுவார். கொஞ்சம் உரொட்டியும் தண்ணீருமாத்திரம் சாப்பிட்டு தமக்கு ஒழிந்த உத்தரவான நேரமெல்லாம் அந்தக் குடிசையில் தன்னைத் தானே ஒறுத்துத் தபசு செய்துகொண்டு வந்தார். பசாசுகள் அவரைச் சும்மா விடவில்லை. அவைகள் அவருக்குச் செய்துவந்த தந்திரங்கள் எவ்வளவு பெரிதானாலும் தமது தவ முயற்சிகளாலும், செபத்தினாலும் அவைகளை வென்று பசாசுகளைத் துரத்தியடிப்பார்.

உயர்ந்த குலத்திற் பிறந்த அவர், மேலான சாஸ்திரம்களைக் கற்றறிந்த அவர், அநேகரைத் தமது அருமைப் பிரசங்கங்களால் மனம் திருப்ப வேண்டிய அவர், பதிதருடைய சம்மட்டியென்று அழைக்கப்பட வேண்டிய  அவர், சர்வேசுரன் அவருக்கு அருளிய வரத்தால் அதிக அற்புதங்களைச் செய்ய வேண்டிய அவர், இப்படி தம்மை தானே தாழ்த்தி நீசத் தொழில்களைச் சந்தோஷமாய்ச் செய்து வந்தது எவ்வளவோ ஆச்சரியத்துக்குரிய தாயிருக்கின்றது. அர்ச். அந்தோனியார் தம்முடைய புண்ணியத்துக்காகவும், அர்ச்சியசிஷ்டதனம் அடையவும், பிறர் ஆத்துமங்களை ஈடேற்றத் துக்கு முந்தியும் (செய்துவந்த புண்ணியங்களை நாம் கண்டு அதிசயிக்கத்  தான் செய்வோம். ஆத் (At) என்னுங் குருவானவர் சொல்லியிருக்றெதென்னவென்றால், தாழ்ச்சியென்னும் புண்ணியம் அர்ச். அந்தோனியாரிடத்தில் விசேஷமான விதமாய் விளங்கிற்று. (கொத்திர மகிமையையும், சாஸ்திரத் திறமையையும் கொஞ்சமாவது யோசிக்காமல் தன்னை அற்பமாகவே எப்போதும் எண்ணி வந்தார் என்கிறார்,

தாழ்ந்த வேலைகளை மனச் சந்தோஷத்தோடு செய்து வருவார். இஸ்பிரீத்துசாந்துவானவருடைய நல்ல ஏவுதல்களை அறிந்து தம் இருதயத்தில் அவைகளைப் பதியவைக்க கெபிகளையும் தனி இடங்களையும் தேடித் தியானஞ் செய்வார்,

இந்த அர்ச்சியசிஷ்டவரிடத்தில் விளங்கின புண்ணிய மாதிரிகளை, மட்டற்ற தாழ்ச்சியை, உலக மகிமை கீர்த்தியின்மேல் வெறுப்பைக் கண்ட நாம் நம்மிடத்திலும் அந்தப் புண்ணியங்கள் கொஞ்சமாவது விளங்குவதற்குப் பிரயாசைப்படாதிருக்கலாமோ. பிரயாசைப்பட்டால் அவருடைய ஒத்தாசையைக் கொண்டு நமது பிரயாசைக் களவு அந்தப் புண்ணியங்களை அடைவோம்.

செபம்

உலக வீண் பெருமை சிலாக்கியங்களை அகற்றி நிந்தித்துத் தள்ளின அர்ச். அந்தோனியாரே, தாழ்ச்சியின் உத்தம மாதிரியான சேசுநாதரை பணிவுடன் கண்டுபாவித்த நீர், நாங்களும் எங்கள் ஆங்காரப் பெருமை சிலாக்கியத்தைத் தள்ளி, உம்மை எங்களால் கூடுமான மட்டும் கண்டு பாவிக்கத் தயை செய்தருளும். – ஆமென்.

நற்கிரியை – தாழ்ச்சி முயற்சி ஏதாவது செய்கிறது

மளவல்லயச் செபம் – உத்தம் தாழ்ச்சியிள் மாதிரி யான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

St. Antony Devotion in Tamil (Day 5)

ஐந்தாம் நாள்

-அர்ச். அந்தோனியாருக்கு மரோக்கு தேசத்தில் நடத்த நிகழ்ச்சிகள்

சர்வேசுரனுடைய சித்தத்தை ஆசைப்பற்றுதலோடு நிறைவேற்றுகிறதே உத்தம குணம் எனப்படும். என்கிறார் நம் அர்ச்சியசிஷ்டவர், அர்ச். அந்தோனியாருடைய பக்தியுள்ள ஆசை நிறைவேறுகிறதாயிருந்தது. அவர் அர்ச். அகுஸ்தீன் மடத்தை விட்டுப் போனபோது அம்மடத்துச் * சந்நியாசியார் ஒருவர் அவரை நோக்கிப் பரிகாசமாக, எங்களை விட்டுத் தூரமாய்ப் போய்த்தான் அர்ச் சியசிஷ்டவர் ஆகப்போகிறீர் என்றார். அதற்கு அந்தோனியார் மறுமொழியாகத் தாழ்ச்சியோடு சொன்னதாவது: என் சகோதரரே, நான் அர்ச்சியசிஷ்ட பட்டம் பெறுவதை நீர் கேள்விப்படும்போது அதற்காக நீர் சர்வேசுரனுக்குத் தோத்திரஞ் செலுத்துவீர் என்றார். தாம் ஆசித்த காரியம், சர்வேசுரனுடைய வேதத்துக்காகத் தன்னுடைய இரத்தத்தைச் சிந்தி வேதசாக்ஷியாகப் போகவேண்டுமென்று எண்ணின எண்ணம் நிறைவேறுங் காலம் சமீபித்திருக்கிறதென்று கண்ட அந்தோனியார் மிக்க சந்தோஷத்தோடு தான் பிறந்த நாட்டையும் உற்றார் பெற்றார் உறவின் முறையாரையும் சிநேகிதரையும் விட்டுப் புறப்பட்டு ‘கப்பலேறி காற்றென்றும் அலையென்றும் பாராமல் கடலைக் கடந்தார். போகிற வழியில் செபத்திலும் தியானத்திலும், தபசிலும் தன்னைத்தானே தான் பெறவிருக்கும் பெரும் பாக்கியத்துக்குப் பாத்திரவானாகும் படியாக தயாரிப்பு செய்துவந்தார். அவர் வேதசாக்ஷி முடி அடைய விரும்பிய தேசம் வந்து சேர்ந்தபோது அத்தேசத்து உஷ்ணந் தாளமாட்டாமல் கடின வியாதியாய் விழுந்து, படுக்கையாய்ச் சில மாதங்கள் இருந்ததைக் கண்ட பெரியவர்கள் அவர் போர்த்துகல் தேசத் திரும்பிப் போகும்படி கட்டளையிட்டார்கள். வேதசாக்ஷ முடியை வெகு ஆவலோடு தேடி வந்த அவர் சர்வேசுரனுடைய சித்தம் (வேறாகையால் அமைந்த மனதோடு திரும்பினார், அவருடைய பிதாவான அர்ச். பிரான்சிஸ்கு அநேகம் பாவிகளையும் பிரிவினைக்காரரையும் மனந்திருப்பி ஆயன் மந்தையிற் சேர்த்தவண்ணம் அந்தோனியாரும் செய்ய நியமித்திருந்தார் சர்வேசுரன். கப்பலேறி எஸ்பாஞா தேசத்தை நாடிச் செல்லுகையில் பெருங்காற்று எழும்பி கப்பல் அலைமோதி கடலில் புதைக்கப்படும் ஆபத்தான நிலையில் அந்தோனியார் ஆதிபரனுடையவும், சமுத்திரத்தின் நட்சத்திரமாகிய கன்னி மாரியம்மாளுடையவும் உதவியை மன்றாடி, அதிகாரத்தோடு அலைகளுக்குக் கட்டளையிடவே அலைகள் அமர்ந்து சிசிலியா தீவின் தாவோர்மினா பட்டணத்தின் (Taormina en Sicals) கரையோரங் கப்பல் சேர்ந்தது. கப்பலைவிட்டிறங்கி இரண்டு மாத காலம் அவ்விடந் தங்கியிருந்த போது கிணறொன்றெடுக் கசி செய்தார். அக்கிணற்று நீரால் இக்காலத்திலும் அநேக நோயாளிகள் செளக்கியமடைந்து வருகிறார்கள். அவர் கையால் நட்ட எலுமிச்சஞ் செடி இப்போதும் வருஷா வருஷம் பூத்துக் காய்த்து வருகின்றது. அவ்விடத்தினின்று அவரும் காஸ்தீல் பட்டணத்து பிலிப் என்னுஞ் சகோதரரும் {Frore Philippe de Castile) 1221-ம் வருஷம் மே மாதம் 30-ந் தேதி சம்மனசுகளின் மாதா (Notre Dame des Anges) மடத்தில் கூடின சபை சங்கத்துக்கு வந்தார்கள்.

அச்சங்கத்துக்கு வந்திருந்த அர்ச். பிரான்சிஸ்குவும் தாழ்ச்சியால் விளங்கினார். அவருடைய மாதிரியைப் பின்பற்றி வந்த அர்ச். அந்தோனியாரும் தாம் இன்னாரென்று காண்பிக்காமலிருந்ததால் மற்றெவரும் அவருடைய கோத்திரத்தின் மகிமையையும், கல்வி சாஸ்திரத் திறமையையும், புண்ணிய மகிமை பெருமையையும் அறிந்தவர்களல்ல. அச்சங்கத்துக்கு வந்திருந்த ரோமாஞா (Romagna} நாட்டின் அதிசிரேஷ்டர் அவரைத் தம்மோடு அழைத்துப் போகச் சம்மதித்து மோந்த்தே பாவோலோ {Mkhte Paolo) பான்னும் மடத்தில் அவரிருக்கும்படி நியமித்தார்.

அர்ச். அந்தோனியார் தம்மைக் குறித்து ஒன்றும் சொன்னவரல்ல. தமது உன்னத மாதிரியான சேசு நாதருடைய பாதத்தில் தம்மை முழுமையும் ஒப்புவித்து அவருடன் ஒன்றித்திருப்பதை மாத்திரமே தேடி வந்தார்.

அர்ச்சியசிஷ்டவர்களிடத்தில் இரண்டு வித்தியாசமான காரியங்களை நாம் கண்டறிய வேண்டியது அவசியம். நாம் கண்டு பாவிக்கவேண்டிய அவர்களுடைய புண்ணியங்கள், நாம் கண்டு ஆச்சரியப்படவேண்டிய அவர்களுடைய புதுமைகள், அர்ச். அந்தோனியாருடைய புதுமைகளை. அப்புதுமைகளைச் செய்யச் சர்வேசுரன் அவருக்குத் தந்தருளின வல்லபத்தைக் கண்டு நாம் ஆச்சரியப்படுவது மல்லாமல் முக்கியமாய் அவருடைய அரிய புண்ணியங்களை நம்மாலானமட்டும் கண்டுபாவிக்கப் பிரயாசைப்படுவோ மானால் அவருடைய ஒத்தாசையை அடைவோமென்பதில் கொஞ்சமாவது சந்தேகமில்லை.

செபம்

ஓ! சிறந்த புண்ணியங்களால் விளங்கி, மேன்மை பெற்றவரான அர்ச். அந்தோனியாரே, வேதசாக்ஷ முடி அடைவதற்காக அதியாசையோடு பக்திச் சுவாலகருகி கொப்பான அர்ச், பிரான்சிஸ்கு சபையில் உட்படத் தீர்மானித்தரே. தவத்தினுடையவும் ஒறுத்தலினுடையவும் ஆசையை எங்களுக்கு அடைந்தருளக் கிருபை புரியும் – ஆமென்.

நற்கிரியைஒருசந்தி அனுசரிப்பது.

மனவல்லயச் செபம் – விரும்பி வேதசாட்சியான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

St. Antony Devotion in Tamil (Day 4)

நான்காம் நாள்

அர்ச். அந்தோனியாருடைய அழைப்பு 

1210 ம் வருஷம் நமது அர்ச்சியசிஷ்டவருக்குப் பதினைந்து பிராயமானபோது வெகு அழகு செளந்தரிய முள்ளவராயிருந்தார். உலகத்தில் மற்றவர்களால் மதிக்கப் படுவதற்கும், உத்தியோகப் பெருமைகளை அடைவதற்கும் வேண்டிய ஆஸ்தியோ, நற்குணங்களோ, சாஸ்திரமேr இவையெல்லாம் அவரிடத்தில் குறைவில்லாதிருந்தபோதிலும், நாளுக்குநாள் உலகத்தின் மட்டில் வெறுப்புண்டாகி, சிறு பிராயத்தில் உலக மாயைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்கு ஆசைப்பட்டு, தம்மைப் பெற்றோருடைய அனுமதி பெற்று அர்ச், அகுஸ்தீன் சபைச் சந்நியாசிகளுடைய மடத்திற் சேர்ந்தார். ஆனால் அம்மடம் தாம் பிறந்த பட்டணத்துக்கு வெகு அருகாமையிலிருந்ததாலும், ஏற்கனவே வெகு கட்டாயத்தின்பேரில் தமக்கு உத்தரவு தந்த தாய் தந்தையும் உறவின்முறையார் சிநேகிதர்களும் அருகாமையிலிருந்ததாலும் தன் துறவுகோலத்துக்கு இடையூறு நடக்கக் கூடுமென்று அர்ச்சியசிஷ்டவர் அஞ்சி தூரத்திலுள்ள கோயிம்பிரா பட்டணத்திலிருக்கும் சந்நியாசிகள் மடத்துக்குத் தன்னை அனுப்பிவிடும்படி பெரியவர்களைக் கேட்டுக்கொண்டார். அவ்வாறு அம்மடம் சேர்ந்து செபத்திலும், படிப்பிலும், கைவேலையிலும், தியானத்திலும் மற்றச் சந்நியாசிகளைப்போலக் காலம் செலவழித்து வந்தார். தனக்கிடப்பட்ட வேலைகளை வெகு கீழ்ப்படிதலோடும், சுறுசுறுப்போடும் செய்து வந்தார். ஒருநாள் தமக்கிடப்பட்ட வேலையை அவர் செய்து கொண்டிருந்தபோது, கோயிலில் தேவநற்கருணை எழுந்தேற்ற மணியடிக்கக் கேட்டு தானிருந்த இடத்திலேயே தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து தன் இரக்ஷகரை ஆராதித்தார், ஓ! புதுமை! திடீரென கோயிற் சுவர் விரிந்து

மடத்துக் கோயில் பீடத்துக்கு முன்பாக முழங்காற்படி பிட்டது. அதனால் அது சர்வேசுரனுடைய சித்தமென்ரறிந்து அர்ச். பண்டங்கள் அடங்கியிருந்த பெட்டியைப் மடத்தின்மேல் ஸ்தாபித்து வைத்தார்கள். இதைக் கண்ட அர்ச். அந்தோனியாருடைய மனதில் அப்போதே பிரதேசங்கள் போய் வேதத்தைப் போதிக்கவும், வேதசாக்ஷ முடி பெறவும் அளவற்ற ஆசை பிறந்தது.

ஆனதால் தாமிருந்த மடத்தை விட்டு அர்ச். பிரான்சீஸ்கு சபையிற் சேரவேண்டுமென்கிற எண்ணம் அவருக்கு உண்டான போதிலும் சர்வேசுரனுடைய சித்தமென்னவோவென்று தன் மனதில் தத்தளித்து, அர்ச். பண்டங்களுக்கு முன்பாக வேண்டிக்கொண்டு வந்தபோது, ஓர் இரவு அர்ச். பிரான்சிஸ்கு அவருக்குத் தரிசனை காண் பித்து அவர் தம்முடைய சபையிற் சேர சர்வேசுரன் பேரால் அவருக்குக் கட்டளையிட்டார்.”

அப்போது அவரிருந்த மடத்துச் சிரேஷ்டரும் மற்றச் சகோதரர்களும் அதிக விசனமடைந்தாலும், பிரான்சிஸ்கு சபைச் சந்நியாசிகள் கொண்டுவந்த கனமான அங்கியைத் தரித்து மாரோக் தேசம் அனுப்பப்படுகிற வார்த்தைப் பாட்டின்மேல், வேதிசாகூ முடி, பெறலாமென்கிற ஆசையோடு அந்தோனியாரென்னும் பெயர் வைத்துக் கொண்டு புறப்பட்டார்.

`      நம்முடைய அழைப்புக்குத் தகுந்த பிரகாரம் நமது அந்தஸ்தில் நாம் செய்யவேண்டிய காரியங்கனோ, படவேண்டிய பாடுகளோ, சர்வேசுரன் அநேகங் கட்டளையிட்டிருந்தபோதிலும் அவைகளையெல்லாம் நாம்  நிறைவேற்றவோ, சகிக்கவோ, வரும் தந்திரங்களைச் செயிக்கவோ வேண்டிய ஒத்தாசை, தைரியம், வரப்பிரசாதம் நமக்குக் கொடுக்கிறார். அர்ச், அந்தோனியாருடைய தாய் தகப்பன் தாங்கள் அருமையாய் வளர்த்த பிள்ளையைச் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தது போல், பிள்ளைகளைப் பெற்ற தாய் தகப்பன்மாரே, நாம் எல்லோருமே சர்வேசுரனுக்குச் சொந்தமாயிருக்கிறபடியினாலே, உங்கள் பிள்ளைகளைச் சர்வேசுரன் அமைக்கத் திருவுளமானால் அவர்களைச் சந்தோஷமாய் அவருக்கு ஒப்புக்கொடுங்கள். இப்படிச் செய்வதால் உங்கள் மட்டிலும் உங்கள் பிள்ளைகளின் மட்டிலும் தேவாசீர்வாதமும் அர்ச். அந்தோனியாருடைய அனுக்கிரகமும் உண்டாகும்.

செபம் ‘

ஓ மகா மகிமை பொருந்திய அர்ச். அந்தோனியாரே, உலக ஆபத்துகளையும், தந்திரச் சோதனைகளையும் நீக்கி விலகுகிறதற்கு உலகப் பெருமை, ஆஸ்தி, சுகம் இவை யாவையும் புறக்கணித்துச் சந்நியாசி கள் சபையில் உட்பட்டீரே, அடியோர்களுக்கும் உலக வீண் பெருமை, சிலாக்கியம், சுகம் இவைகள் மட்டில் மெய்யான வெறுப்பை அடைந்தருளக் கிருபை புரியும். – ஆமென்.

நற்கிரியை – யாதாமொரு ஒறுத்தல் முயற்சி செய்கிறது.

மனவல்லயச் செபம் – உலகத்தை வெறுத்தவரான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்