உத்தரிக்கிற ஆத்துமங்களின் வணக்க மாதத்திற்கான தியானம்

திருச்சபை, துவக்கத்திலிருந்தே உத்தரிக்கிற ஆத்துமங்கள் மீது அனுதாபம் காட்டி வந்திருக்கிறது. 10ம் நூற்றாண்டில் ஜீவித்த அர்ச். ஓதிலோ என்ற ஆசீர்வாதப்பர்சபை அதிபர், உத்தரிக்கிறஸ்தல ஆத்துமங்களின் வேதனையைப்பற்றி ஓர்பரிசுத்த தபோதனர் கண்ட காட்சி யைப் பற்றி கேள்விப்பட்டார். உடனே, அதிபர், தம் சபை மடங்களிலெல்லாம், சகல அர்ச்சிஷ்டவர்களின் திருநாளை அடுத்துவரும் நாளில், இறந்த சகல விசுவாசிகளின் இளைப்பாற்றிக்காக, மாலை ஆராதனை ஜெபங்களும் (vespers), காலை ஆராதனை ஜெபங்களும் (matins), திவ்ய பலிபூசையும் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டார். குளூனி நகரில் எழுதப்பட்ட இவ்வுத்தரவு இன்னும் பத்திரமாய்ப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உத்தரிக்கிற ஸ்தல ஆத்துமங்களுக்கு மிகவும் பயனுள்ளதும், ஏற்புடையதுமான இப்பக்தி முயற்சி நாள் டைவில் முழுவதும், உலகெங்கிலும் பரவியது.

உத்தரிக்கிற ஆத்துமங்களுக்காக அன்றைய தினம், ஒவ்வொரு குருவும் மூன்று திவ்ய பலிபூசை நிறைவேற்றுவதற்கு அனுமதிக்கும் திருச்சபை, விசுவாசிகள் அன்று, தாங்கள் காணும் திவ்ய பலிபூசை, உட்கொள்ளும் திவ்ய நன்மை, ஜெபங்கள், தர்மங்கள் சகலத்தையும் இறந்தோருக்காக ஒப்புக்கொடுக்கும்படி, அவற்றிற்கான பல்வேறு வகையான ஞானப்பலன் களைக் கொடுத்துத் துாண்டுகிறது. உத்தரிக்கிற ஆத்துமங்கள், தங்களுக்குத் தாங்களே உதவ முடியாது. ஆதலால், யுத்த சபையிலிருக்கும் சகோதரரான நம்மிடம், அவர்கள், உதவி கேட் கின்றனர். கொடிய வேதனைகளிலிருந்து, தங்களை விடுவிக்கும்படி திவ்யபலிபூசைகள், ஒப் புக்கொடுக்கப்படும்படி ஆசிக்கின்றனர்.

to read more Christian stories https://tamilcatholicprayers.blogspot.com/p/blog-page_15.html

அர்ச். பிரான்ஸ் அசிசியாரின் சீடரான சகோ.ஜியோவான்னி, ஒருமுறை, உத்தரிக்கிற ஆத்துமங்கள் திருநாளன்று, பக்திபற்றுதலுடன் திவ்ய பலி பூசை நிறைவேற்றிய போது, நித்திய பிதாவே! உமது திவ்யகுமாரனின் திருமுகத்தைப்பார்த்து, உத்தரிக்கிற சிறையிலிருக் கும் ஆத்துமங்களை விடுவித்தருளும் என்று ஜெபித்தார். அப்போது, எண்ணமுடியாத திரளான ஆத்துமங்கள் உத்தரிக்கிறஸ்தலத்திலிருந்து வெளியேறி, மிகுந்த பிரகாசத்துடன் மோட்சத் திற்கு செல்வதைக் கண்டார். ஒருசமயம், உத்தரிக்கிற சிறையிலிருந்து விடுபட்ட அர்ச். பெர் நார்துவின் மடத்தைச் சேர்ந்த சந்நியாசி, வயோதிபரான ஒரு சந்நியாசியார் முன்பாகத் தோன்றி, திவ்ய பலிபூசை நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு பீடத்தைச் சுட்டிக் காண்பித்து, என் சங்கிலிகளை அறுத்தெறிந்த பெரிய வல்லமை அதுவே! என் மீட்பின் கிரயம் அதுவே! என் பாவக்கறைகளை அகற்றியது, தேவபலிப்பொருளே! என்றார். திவ்ய பலிபூசையே, ஜீவிய ரும் மரித்தோரும் பயனடைவதற்கான தேவவரப்பிரசாதத்தின் வற்றாத ஊற்று! திவ்ய பலி பூசை அளிக்கும் அபரிமிதமான தேவவரப்பிரசாதங்களிலும், பேறுபலன்களிலும், உத்தரிக் கும் சிறையில் அவதியுறும் நமது பெற்றோர் உற்றார் நேசரும் பயனடையும்படியாக, நாம் தினமும் ஜெபிப்போம்!

Featured

பதித மார்க்கத்தாரை மனந்திருப்பும் ஜெபமாலை!

பல வருடங்களுக்கு முன், ஓர் மேற்கத்திய நாட்டில், பெயாட்ரிஸ் அலென் என்ப வள் வசித்து வந்தாள். அவள் ஓர் ஆங்கிலேயப்பிரபுவின் மனைவி. பிரபுவின் குடும்பம் புராட் டஸ்டான்டு பதிதத்தை அனுசரித்தது. பெயாட்ரிஸ், தப்பறையான அப்பதித மதத்தின் மீது, பற்று கொண்டிருந்தாள். அவள் வீட்டினருகில், பிரிட்ஜெட் மர்பி என்ற ஐயர்லாந்து நாட் டைச் சேர்ந்த ஓர் மூதாட்டிதனியாக வசித்து வந்தாள்; அவள் சத்திய கத்தோலிக்க வேதத் தைச் சேர்ந்தவள். சகல வேத கடமைகளையும் பிரமாணிக்கத்துடன் அனுசரித்து வந்தாள். அவள் எப்போதும், மிகுந்த பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் ஜெபமாலை ஜெபிப்பதை பெயாட்ரிஸ் கவனித்து வந்தாள். பதித மதத்தில் பற்றுடைய பெயாட்ரிஸ், மற்ற பதிதரைப் போல, ஆங்காரத்தால் ஏவப்பட்டவளாக, சத்திய வேதத்தின் கோட்பாடுகளையும், ஜெபங்

களையும், பக்தி முயற்சிகளையும், இழிவாகக் கருதி, அவற்றை, பாப்பு மார்க்கத்தாரின் குருட்டு பக்தியென்று கேலி செய்வாள்.

தான் விசுவசிக்கும் பதிதமதமே, உண்மையான வேதம் என்று கருதிய பெயாட்ரிஸ், அண்டை வீட்டினளான அக்கத்தோலிக்க மூதாட்டியைத் தனது பதித மதத்திற்கு எப்படியா வது மனந்திருப்ப வேண்டும் என்பதில் கவனமாக இருந்தாள். தன்னுடைய மதத்தின் வெளிச்சத்திற்கு, கத்தோலிக்கரை கூட்டி வர வேண்டும் என்று நினைத்த பெயாட்ரிஸ், ஒரு நாள், மர்பி பாட்டியிடம், பாட்டி, ஏன் ஒரே மாதிரியான வார்த்தைகளையேக் கொண்டு ஜெபிக்கிறீர்கள்? அது உங்களுக்கு சலிப்பாக இல்லையா? படிப்பறிவு இல்லாதவரின் ஜெபம் தானே அது? என்று கேலியாகக் கேட்டாள். அதைக் கேட்ட பாட்டி, “என்ன! ஜெபமாலை யைப் பற்றியா, அவ்வாறு என்னிடம் கேட்கின்றாய்? அது, தனிமையில் இருக்கும் எனக்கு, எவ்வளவு மகிழ்ச்சியும் ஆறுதலும் தருகிறது ! துன்பத்திலும் துயரத்திலும் என்னை, அவ்வுன்னத ஜெபம் தேற்றுகிறது. என் இருதயத்திற்கு சர்வேசுரனுடைய சமாதானத்தை, அளிக்கின்றது. அபரிமிதமான தேவவரப்பிரசாதங்களை, ஜெபமாலையை ஜெபிக்கும் யாவரும் பெற்றுக் கொள்வர். ஆதலால், ஆன்ம சரீர ஆபத்துக்களிலிருந்தும், பசாசின் சகல தீமைகளிலிருந்தும், அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். சர்வேசுரனுடைய பரிசுத்த தாயாருடன் பேசுவதை, கல்வியறிவு இல்லாதவருடைய ஜெபம் என்று நீ சொல்வது, தேவ தூஷணமல்லவா? அதற் காக நீ ஆண்டவரிடம் மன்னிப்பு கேள் ! ஜெபமாலை ஜெபிக்கும்போது, தேவமாதாவுடன் பேசுகிறேன் என்பதை, அறிந்துகொள்’ என்றாள்.

ஜெபமாலையைப்பற்றி, மர்பி பாட்டி கூறியதைக் கேட்டபெயாட்ரிஸ், பாட்டியிடம், ஜெபமாலையைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததெல்லாவற்றையும் எனக்குக் கூறுங்கள் என்று கேட்டாள். காய்கறி விற்று ஜீவித்து வந்த அந்த ஏழைப்பாட்டி, அதிக கல்வியறிவு இல்லாதி ருப்பினும், ஞானத்துடனும் சந்தோஷத்துடனும், ஜெபமாலையிலிருந்த பாடுபட்ட சுரூபத் தைக் காண்பித்துக் கொண்டே, பரிசுத்த ஜெபமாலையைப்பற்றி பின் வருமாறு விவரித்தாள்: நான் ஜெபமாலை ஜெபிக்கத் தொடங்குமுன், திவ்ய சேசுவை, சிலுவையிலிருந்து இறக்கி, வியாகுல மாதாவின் மடியில் கிடத்தியதும், திவ்யதாயார் செய்தது போலவே, நானும் ஆண் டவரின் ஐந்து திருக்காயங்களையும் அன்புடன் முத்தி செய்வேன். நேச இரட்சகர் எனக்காகப் பட்ட பாடுகளுக்காக, அவருக்கு நன்றி செலுத்துவேன். என் பாவங்களை மன்னிக்கும்படி யும், நான் இறந்ததும் என்னை மோட்சத்திற்குள் சேர்த்துக்கொள்ளும்படியும் நேச ஆண்டவ ரிடம் கெஞ்சி மன்றாடுவேன்.

ஜெபமாலையில், இரு பகுதிகள். ஒன்று சிறிது அதில் ஐந்து மணிகள் மாத்திரமே உண்டு. ஆயுள் குறுகியது. என் துன்பங்கள் சீக்கிரம் முடிந்துபோகும். சாவுவிரைவிலேயே வரும். நல்ல மரணத்திற்காக நான் எப்போதும் தயாரிக்க வேண்டும். ஏனெனில் எந்நேரத்திலும் நான் சாக லாம் என்று, அது எனக்கு நினைவூட்டுகிறது. நன்மரண வரம் கேட்டு மன்றாடுவேன். ஜெப மாலையின் மற்றொரு பகுதி, பெரிய பகுதி. இனி வரவிருக்கும், முடிவில்லாத நித்திய ஜீவியத் தைப் பற்றி அது, நமக்கு நினைவூட்டுகிறது. பிரிட்ஜெட் மர்பி! எச்சரிக்கையாயிரு! நீ மோட் சத்துக்குப் போக வேண்டும். நரகத்துக்குப் போகக் கூடாது ! என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன். சர்வேசுரனை மனநோகச் செய்யாமலிருப்பதற்கு, இனி, எப்பாவத்தையும் கட் டிக் கொள்ளாமல், உத்தம் கத்தோலிக்க கிறீஸ்துவளாக ஜீவிப்பதற்கு, முயல்வேன். பெரிய மணிகளில், ஆண்டவரே கற்பித்த ஜெபத்தை சொல்கிறேன். இந்த ஜெபத்திற்கு, அவர் செவி கொடுப்பார். ஏனெனில், செவி கொடுப்பதாக, அவரே வாக்களித்திருக்கிறார். இது, மிகவும் அழகு வாய்ந்த ஜெபம். ஆசையுடனும், நேசத்துடனும் கடவுளை, பிதாவே” என்று அழைக் கிறேன். நம்மை பரமானந்த சந்தோஷத்தில் ஆழ்த்துவதற்கு இந்நினைவே போதும்.

சிறு மணிகளில், மங்கள வார்த்தை ஜெபத்தை ஜெபிக்கிறேன். ஆண்டவருடைய திருமனிதவதாரத்தின் ஆச்சரியமிக்க தேவ இரகசிய நிகழ்வையே, இந்த அழகிய ஜெபத்தில் தியானிக்கிறேன். பரலோகத் திட்டத்தின் படி, அர்ச். கபிரியேல் சம்மனசானவர் தேவமாதா விடம் வாழ்த்திக்கூறிய மங்கள வார்த்தையினுடைய தேவ இரகசியத்தைப் பற்றி ஆச்சரியத்

துடன் தியானிக்கிறேன். திவ்ய இரட்சகருடைய தாயாராகப்போகும் சுபசெய்தியைக் கூறிய சம்மனசானவருடைய அதே வார்த்தைகளைக் கொண்டு, தேவமாதாவை, நாம் திரும்பதிரும்ப வாழ்த்தும் போது, தேவமாதா மிகுந்த சந்தோஷத்துடன் சர்வேசுரனைவாழ்த்துவார்கள். அது, சர்வேசுரனுக்கு மிகவும் உகந்த ஜெபமாக இருக்கும். அதனால், நாம் எவ்வளவோ அபரிமித மான தேவவரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வோம்! அடிக்கடி, மங்களவார்த்தை ஜெபத் தை ஜெபிப்பதின் வழியாக, சம்மனசானவர் கொடுத்த சந்தோஷத்தை, தேவமாதாவிற்கு, நானும் கொடுப்பதற்கு ஆசிக்கிறேன்.

தேவமாதா சர்வேசுரனுடைய தாய்; என்னுடைய தாயாகவும் இருக்கிறார்கள். நானும் அர்ச்சிஷ்டவளாக ஆக வேண்டும் என்று, தேவமாதாவிடம் விண்ணப்பிப்பேன். அதற்கு அவர்கள் உதவுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஏனெனில், கிறீஸ்துவர்களெல்லோரும் அர்ச்சிஷ்டவர்களாக வேண்டும் என்பதே, சர்வேசுரனுடைய திட்டம். அத்திட்டத்தை, செயல்படுத்துவதற்காகவே, தேவமாதா, உலகிலுள்ள சகல மனிதரையும், தமது பிள்ளைக ளாக, ஆண்டவர் சிலுவையில் மரிக்கும்போது, தத்து எடுத்துக்கொண்டார்கள். அர்ச்சிஷ்ட மரியாயே! என்ற மங்களவார்த்தை ஜெபத்தின் பிற்பகுதி மன்றாட்டை, ஜெபிக்கும் போது, பரதேசத்தின் ஏவையின் மகளாகிய, எனக்காக, இப்பொழுதும், என் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும்படி, தேவமாதாவிடம் மன்றாடுவேன்.

எனவே தான், ஜெபமாலை ஜெபிக்கும்போது, நான் சர்வேசுரனுடைய தாயாருடன் பேசுகிறேன் என்பதை தியானித்து, மிகுந்த சந்தோஷத்துடனும் உற்சாகத்துடனும் ஜெபிக்கி றேன். அது ஒரு போதும், எனக்கு சலிப்பை அளிக்காத உன்னதமான ஜெபமாக இருக்கிறது. ஜெபமாலை ஜெபிக்கும் கத்தோலிக்கராகிய எங்களுக்கு, சர்வேசுரனுடைய மாதா, அளவில் லாத ஆன்ம சரீர நன்மைகளை அளித்து வருகிறார்கள். சர்வேசுரனுடைய திருமனித அவதாரத் தைப் பற்றியும், அவர் 33 ஆண்டுகள் உலகில் சஞ்சரித்ததைப் பற்றியும் தியானிக்கிறோம். அவைதான் சந்தோஷ தேவ இரகசியங்கள். அவர் பட்ட கொடிய பாடுகள், சிலுவை மரணத் தைப் பற்றியும் தியானிக்கிறேன். அவை துக்க தேவ இரகசியங்கள். நேச ஆண்டவருடைய திருப்பாடுகளைப் பற்றி, தியானிக்கும் போது, நம் பாவங்களின் மட்டில் உத்தம மனஸ்தாபம் ஏற்படுகிறது. தேவ சிநேகம் நம்மிடம் அதிகரிக்கிறது. ஆண்டவருடைய உத்தானத்தைப்பற் றியும், மோட்ச ஆரோகனத்தைப் பற்றியும், திவ்ய இஸ்பிரீத்து சாந்துவானவருடைய வருகை யைப் பற்றியும், பரலோக பூலோக இராக்கினியான தேவமாதவின் மோட்சாரோபனத்தைப் பற்றியும் தியானிப்பதே, மகிமை தேவ இரகசியங்கள். தினமும் தேவாலயத்திற்கு செல்வேன். திவ்ய நற்கருணைப்பேழையில் நமக்காக, ஆண்டவர் காத்திருக்கிறார். திவ்யபலிபூசையில் பக் தியுடன் பங்கேற்பேன். திவ்ய நன்மை வழியாக, என் இருதயத்திலும் எழுந்தருளி வரும் நேச ஆண்டவரை தகுதியுடன் வரவேற்பதற்கு, எனக்கு உதவும்படி, தேவமாதாவிடம் ஜெபிப் பேன். அவர்களும் எனக்கு உதவுவார்கள், என்று கூறி முடித்தாள்.

பெயாட்ரிஸ், பாட்டியிடம், அதிகம் படிப்பறிவு இல்லாத உங்களுக்கு இவையெல் லாம் யார் கற்பித்தது? என்று கேட்டாள். அதற்கு மர்பி பாட்டி, ஐயர்லாந்தில், பக்தியுள்ள கன்னியாஸ்திரிகளும், சங்.ஒற்றூல் சுவாமியாரும் கற்பித்தார்கள் என்றாள். தன் பதித மார்க் கத்தைச் சேர்ந்த பாதிரிமாரும், ஆயர்களும், இதுவரை, இவ்வளவு நேர்த்தியான பிரசங்கத் தைச் செய்யவில்லை என்று பெயாட்ரிஸ் உணர்ந்தாள். பெயாட்ரிஸின் குடும்பம் மனந்தி ரும்ப வேண்டுமென்று என்று, பாட்டி, ஜெபமாலை ஜெபிக்கும்போதெல்லாம் இடைவிடா மல் வேண்டிக்கொண்டிருந்தாள். ஜெபமாலையின் வல்லமையால், தேவ அனுக்கிரகத்தை அடைந்த பெயாட்ரிஸும் அவளுடைய குடும்பத்தினரும், விரைவிலேயே, புதுமையாக, சத்திய திருச்சபையில் சேர்ந்தனர். தங்களுடைய மனந்திரும்புதலுக்காக மர்பி பாட்டி, பயன் படுத்திய ஜெபமாலையை, ஓர் விலையயர்ந்த பொக்கிஷமாக, பெயாட்ரிஸ் எப்பொழுதும் தன்னுடன் வைத்திருந்தாள். தங்களுடைய மனந்திரும்புதலுக்குக் காரணமான அப்பரிசுத்த ஜெபமாலையை எல்லோரிடத்திலும் காண்பித்து, அதன் வரலாற்றை விவரிப்பாள். .

யூதித் பாட்டியின் தேவசிநேகம்

பல ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஏழை வயோதிபர்களுக் கென்று கட்டப்பட்டிருந்த விடுதியிலிருந்த தேவாலயத்தின் பீடத்திலிருந்த வாடா விளக்கு, மங்கலாய் எரிந்து, அன்புக் கைதியாக திவ்யசற்பிரசாதப்பேழையில் எழுந்தருளியி ருக்கும் சர்வாதி கர்த்தருக்குக் காவல் புரிந்து கொண்டிருந்தது. இருள் பரவியிருந்த அந்நே ரத்தில் அங்கு வேறு வெளிச்சமே இல்லை. புதிதாக அன்று அங்கு வந்திருந்த சங். இஸபெல் கன்னியாஸ்திரி அமைதியாக கோவிலுக்குள் வந்து, முழங்காலிலிருந்து, சில வினாடி ஜெபித் தார்கள். தனியே இருப்பதாக நினைத்த இஸபேல் சகோதரியின் கண்கள், இருளுக்குப் பழகிய பின்னரே, வேறு ஓர் ஆளும் அங்கிருப்பதாக உணர்ந்தது. பீடத்தின் அருகில் ஓர் மூலையில் அந்த உருவம் குனிந்திருந்தது. அவள் கிழவி. முழந்தாளிட்டிருந்தாள். இரவு படுக்கும் நேரத் திற்கான மணியடித்தவுடன், மெதுவாகவும் சிரமத்துடனும் எழுந்து, தன் நேச ஆண்டவர் குடியிருக்கும் தேவநற்கருணைப் பேழையை கடைசி முறையாக அன்புடன் நோக்கிவிட்டு, அமைதியாக கோவிலை விட்டு வெளியேறினாள்.

இஸபெல் கன்னியாஸ்திரி அநேக ஆண்டுகளாக பல்வேறு மடங்களிலிருந்து ஏழை வயோதிபர்களைப் பராமரித்து வந்தவர்கள்; திவ்ய நற்கருணைப் பேழைக்குமுன் நெடுநேரம் செலவழித்த பல பக்தியுள்ள வயோதிகர்களை அறிவார்கள். புது இடத்துக்கு வந்த நாளிலி

ருந்து, அந்த கிழவிமேல் அவர்களுக்கிருந்த மதிப்பு அதிகரித்தது. கிழவி அநேகமாய் எப்போ தும் தேவாலயத்திலேயே இருந்தாள். மறைந்திருந்த தன் கடவுளை, இரட்சகரை, சந்திக்கும் படி, இரவிலும் பகலிலும் இடையிடையே இஸபெல் சகோதரி கோவிலுக்குப் போவார்கள். அந்த சமயங்களிலெல்லாம் கிழவி கோவிலில் இருப்பாள். நாளடைவில், சகோதரி கோவி லுக்கு வந்ததும், முதலில் திவ்யற்கருணைப் பேழையை நோக்கி ஆராதித்து விட்டு, கிழவி முழங்காலிலிருந்து ஜெபிக்கும் வழக்கமான இடத்தையே நோக்குவார்கள். கிழவியின் கண் கள் , மகாப் பரிசுத்த பேழையின்கதவின் மேல் இருக்கும். கையில் ஜெபமாலையப் பிடித்து, ஜெபித்துக் கொண்டிருப்பாள்.

அந்தக் கிழவி யாரென சங். இஸபெல் ஒருநாள் விசாரித்தார்கள். அவளுடைய பெயர் யூதித் மர்பி. அவளுடைய கணவனும் மூன்று மக்களும் ஆறு ஆண்டுகளுக்குமுன் காய்ச் சல் கண்டு இறந்தார்கள். அதிலிருந்து அவள் இங்கு வந்து வசிக்கிறாள். வெகு பக்தியுள்ளவள், என்று சங். ரோஸ் கன்னியாஸ்திரி மொழிந்தார்கள். சகோதரி நான் அந்த பாட்டியுடன் பேச ஆசிக்கிறேன். சேசுவின் திருநாமத்தைச் சொல்லும் போதெல்லாம் அவள் தலை குனிகிறாள். அதிலிருந்து, அவள் ஜெபமாலையை வெகு விரைவாகச் சொல்கிறாள் என்று நினைக்கிறேன். அவ்வளவு விரைவாகச் சொல்லக் கூடாது. இதைப் பற்றி பாட்டியிடம் நான் சொல்லப் போகிறேன். என இஸபெல் கூறியதும், சொல்லுங்கள், அவளைப் போல் ஜெபிக்கும் வரத்தை உங்களுக்குத் தரும்படி ஆண்டவரை மன்றாடுங்கள், என ரோஸ் சகோதரி சொல்லிச் சென்றார்கள்.

மறுநாள் இஸபெல் சகோதரி, கிழவியை அணுகி, பாட்டி கோவிலில் எப்பொழுதும் ஜெபமாலையா சொல்கிறீர்கள்? என்றாள். அதற்கு, அவள் ஒன்றும் பதிலளிக்கவில்லை. தலையை வெறுமனே அசைத்தாள். அருள் நிறை மந்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொல்கிறீர்களா? என்று கேட்டபோது, இல்லை என்று காட்ட அவள் தன் தலையை அசைத்தாளேயொழிய, வார்த்தை ஒன்றும் வெளிவரவில்லை. தான் பேசுவது அவளுக்குப் பிரியமில்லை என நினைத்து, கன்னியாஸ்திரி, அங்கிருந்து போகையில், தயவு செய்து எனக்காகவும் ஜெபியுங்கள் என்று சொல்லிச் சென்றாள். காலையிலிருந்து இரவு வரை, யாதொரு உதவியும் இன்றி, முழந்தாளிட் டிருப்பது எளிதல்ல. நான் ஒரு மணிநேரம் முழந்தாளிட்டிருந்தால் உடலெல்லாம் நோகிறது. கிழவியோ பல மணி நேரமாக அசையாமல் பார்வையை, வேறெங்கும் திருப்பாமல், முழங் காலிலிருந்து ஜெபிக்கிறாளே, என இஸபெல் சகோதரி வியப்புற்றார்கள். யூதித், அது தான் கிழவியின் பெயர். யூதித் பாட்டி, இராப்பகலாய் தன் நேச சேசுவிடம் என்ன பேசுவார்கள் என்று இஸபெல் கன்னியாஸ்திரி சிந்தித்துப் பார்த்தார்கள். ஒரு நாள் இந்தக் கேள்விக்கு பதில் கிடைத்தது.

திவ்ய நற்கருணை ஆசீர்வாதத்துக்கு முன் சங்.இஸபெல், தேவாலயத்திற்குள் போன போது, கிழவி பேசினது என்ன என்று அறிந்து கொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அவள் வழக்கமாக முழந்தாளிடும் இடத்திற்கு அருகில் இருந்த திரைக்குப்பின், கன்னியாஸ் திரி போய் முழந்தாளிட்டார்கள். சில நிமிடங்களுக்குப் பின் யூதித் பாட்டி வந்தார்கள். தான் மாத்திரம் கோவிலில் தனியே இருப்பதாக, நினைத்துக் கொண்டு, முழங்காலிலிருந்து, தரையை முத்தமிட்டு ,”திவ்ய சேசுவே! இதோ நான் திரும்பவும் வந்து விட்டேன்” என்றாள். பிறகு வழக்கமான தன் ஆராதனை கீதத்தை ஆரம்பித்து, “ஓ! நேச சேசுவே! கோடான கோடி வாழ்த்துதல் உமக்கு உண்டாகக் கடவது’ என்னும் ஜெபத்தை பத்து முறை, ஐம்பது முறை நூறு முறை சொல்லி தன் ஜெபமாலை மணிகளை உருட்டி ஜெபித்தார்கள். யாராவது கோவிலினுள் நுழைந்தால், தனது குரலைத்தாழத்திக் கொள்வார்கள். தனியே விடப்பட்டி ருப்பதாக உணர்ந்ததும், சிறிது சத்தமாய் சொல்வார்கள். திவ்ய நற்கருணை ஆசீர்வாதம் முடிந்த பின்னும் யூதித் பாட்டி அங்கிருந்தார்கள். படுக்கைக்குச் செல்ல வேண்டிய நேரமா யிற்று என்று அறிவிக்கும் மணியடித்ததும், அவள் எழுந்து திவ்ய நற்கருணைப் பெட்டியை அன்புடன் நோக்கி,”சேசுவே, என் கண்மணியே, நான் போய் வருகிறேன். மல்லமோன் ஊரி னளான யூதித் மர்பி கிழவியை மறந்து போகாதேயும். சேசுவே! இரவு வந்தனம். அதிகாலை யில் உம்மிடம் திரும்ப வருவேன்” என்றனள். பின் மெதுவாக கதவை நோக்கி, ” சேசுவே, இன்னொரு முறை, பெரிய மாலை வணக்கம்” என்று மொழிந்தாள்.

இஸபெல் சகோதரி கடைசியாக, உண்மையை அறிந்தார்கள். கிழவி திவ்ய சேசுவை நேசித்தாள். சேசுநாதர் சுவாமி, பீடத்தில் மறைந்து வசித்த போதிலும், தன் கண்முன் அவர் உயிருடன் ஜீவிப்பதாக, அவள் முழு இருதயத்துடன் விசுவசித்து, அதன்படி நடந்தாள் என்பதை சங். இஸபெல் கன்னியாஸ்திரி அறிந்தனள். மாதங்கள் பல கடந்தன. ஓரிரவு படுக்கைக்கு சகலரையும் அழைக்கும் மணி அடித்தாயிற்று. யூதித் பாட்டி, படுக்கைய றைக்குச் செல்லவில்லை. கோவிலுக்கு எல்லோரும் விரைந்தனர். அவள், ஒரு மூலையில் சுருட்டி மடக்கி அறிவின்றிக் கிடந்தாள். சேசு அவளைத் தம்மிடம் அழைத்துக் கொண்டார் என்று எல்லோரும் கருதினார்கள். அவளைத் தரையிலிருந்து எழுப்புகையில், இன்னும் உயிர் இருந்தது. மருத்துவமனைக்கு அவளைத் தூக்கிச் சென்றனர். சுயநினைவு வந்தது. தான் பிரமா ணிக்கமாய் நேசித்து வந்த தன் நேச ஆண்டவரை, திவ்ய சேசுவை, கடைசி முறையாக, பரலோக பயணத்தின் வழித்துணையாக உட்கொண்டாள். அவள் நோய்வாய்ப் படுத்திருக் கையிலும் ஒரேஜெபம்:”ஓ! நேசசேசுவே! உமக்குக் கோடான கோடி வாழ்த்துதல். மல்ல மோன் ஊரினளான யூதித் மர்பி கிழவியை மறந்துவிடாதேயும். திவ்ய சேசுவே! கண்மணி யே! போய் வருகிறேன். அதிகாலையில் உம்மிடம் திரும்பி வருவேன்” என ஓயாது சொல் லிக் கொண்டிருந்தாள். ஆம், அவள் சொன்னது போல், அதிகாலையில் அவள், அவரிடம் திரும்பிச் சென்றனள். மோட்சத்திலிருக்கும் சகல பரிசுத்தவான்களுடன் சேர்ந்து, நித்தியத் திற்கும் அவரை வாழ்த்தும்படி மறுநாள் அதிகாலையில் அவளது ஆத்துமம், தனது ஏக நேச ரை நோக்கி பறந்து சென்றது..

https://tamilcatholicprayers.blogspot.com/

St. Antony Devotion in Tamil (Day 5)

ஐந்தாம் நாள்

-அர்ச். அந்தோனியாருக்கு மரோக்கு தேசத்தில் நடத்த நிகழ்ச்சிகள்

சர்வேசுரனுடைய சித்தத்தை ஆசைப்பற்றுதலோடு நிறைவேற்றுகிறதே உத்தம குணம் எனப்படும். என்கிறார் நம் அர்ச்சியசிஷ்டவர், அர்ச். அந்தோனியாருடைய பக்தியுள்ள ஆசை நிறைவேறுகிறதாயிருந்தது. அவர் அர்ச். அகுஸ்தீன் மடத்தை விட்டுப் போனபோது அம்மடத்துச் * சந்நியாசியார் ஒருவர் அவரை நோக்கிப் பரிகாசமாக, எங்களை விட்டுத் தூரமாய்ப் போய்த்தான் அர்ச் சியசிஷ்டவர் ஆகப்போகிறீர் என்றார். அதற்கு அந்தோனியார் மறுமொழியாகத் தாழ்ச்சியோடு சொன்னதாவது: என் சகோதரரே, நான் அர்ச்சியசிஷ்ட பட்டம் பெறுவதை நீர் கேள்விப்படும்போது அதற்காக நீர் சர்வேசுரனுக்குத் தோத்திரஞ் செலுத்துவீர் என்றார். தாம் ஆசித்த காரியம், சர்வேசுரனுடைய வேதத்துக்காகத் தன்னுடைய இரத்தத்தைச் சிந்தி வேதசாக்ஷியாகப் போகவேண்டுமென்று எண்ணின எண்ணம் நிறைவேறுங் காலம் சமீபித்திருக்கிறதென்று கண்ட அந்தோனியார் மிக்க சந்தோஷத்தோடு தான் பிறந்த நாட்டையும் உற்றார் பெற்றார் உறவின் முறையாரையும் சிநேகிதரையும் விட்டுப் புறப்பட்டு ‘கப்பலேறி காற்றென்றும் அலையென்றும் பாராமல் கடலைக் கடந்தார். போகிற வழியில் செபத்திலும் தியானத்திலும், தபசிலும் தன்னைத்தானே தான் பெறவிருக்கும் பெரும் பாக்கியத்துக்குப் பாத்திரவானாகும் படியாக தயாரிப்பு செய்துவந்தார். அவர் வேதசாக்ஷி முடி அடைய விரும்பிய தேசம் வந்து சேர்ந்தபோது அத்தேசத்து உஷ்ணந் தாளமாட்டாமல் கடின வியாதியாய் விழுந்து, படுக்கையாய்ச் சில மாதங்கள் இருந்ததைக் கண்ட பெரியவர்கள் அவர் போர்த்துகல் தேசத் திரும்பிப் போகும்படி கட்டளையிட்டார்கள். வேதசாக்ஷ முடியை வெகு ஆவலோடு தேடி வந்த அவர் சர்வேசுரனுடைய சித்தம் (வேறாகையால் அமைந்த மனதோடு திரும்பினார், அவருடைய பிதாவான அர்ச். பிரான்சிஸ்கு அநேகம் பாவிகளையும் பிரிவினைக்காரரையும் மனந்திருப்பி ஆயன் மந்தையிற் சேர்த்தவண்ணம் அந்தோனியாரும் செய்ய நியமித்திருந்தார் சர்வேசுரன். கப்பலேறி எஸ்பாஞா தேசத்தை நாடிச் செல்லுகையில் பெருங்காற்று எழும்பி கப்பல் அலைமோதி கடலில் புதைக்கப்படும் ஆபத்தான நிலையில் அந்தோனியார் ஆதிபரனுடையவும், சமுத்திரத்தின் நட்சத்திரமாகிய கன்னி மாரியம்மாளுடையவும் உதவியை மன்றாடி, அதிகாரத்தோடு அலைகளுக்குக் கட்டளையிடவே அலைகள் அமர்ந்து சிசிலியா தீவின் தாவோர்மினா பட்டணத்தின் (Taormina en Sicals) கரையோரங் கப்பல் சேர்ந்தது. கப்பலைவிட்டிறங்கி இரண்டு மாத காலம் அவ்விடந் தங்கியிருந்த போது கிணறொன்றெடுக் கசி செய்தார். அக்கிணற்று நீரால் இக்காலத்திலும் அநேக நோயாளிகள் செளக்கியமடைந்து வருகிறார்கள். அவர் கையால் நட்ட எலுமிச்சஞ் செடி இப்போதும் வருஷா வருஷம் பூத்துக் காய்த்து வருகின்றது. அவ்விடத்தினின்று அவரும் காஸ்தீல் பட்டணத்து பிலிப் என்னுஞ் சகோதரரும் {Frore Philippe de Castile) 1221-ம் வருஷம் மே மாதம் 30-ந் தேதி சம்மனசுகளின் மாதா (Notre Dame des Anges) மடத்தில் கூடின சபை சங்கத்துக்கு வந்தார்கள்.

அச்சங்கத்துக்கு வந்திருந்த அர்ச். பிரான்சிஸ்குவும் தாழ்ச்சியால் விளங்கினார். அவருடைய மாதிரியைப் பின்பற்றி வந்த அர்ச். அந்தோனியாரும் தாம் இன்னாரென்று காண்பிக்காமலிருந்ததால் மற்றெவரும் அவருடைய கோத்திரத்தின் மகிமையையும், கல்வி சாஸ்திரத் திறமையையும், புண்ணிய மகிமை பெருமையையும் அறிந்தவர்களல்ல. அச்சங்கத்துக்கு வந்திருந்த ரோமாஞா (Romagna} நாட்டின் அதிசிரேஷ்டர் அவரைத் தம்மோடு அழைத்துப் போகச் சம்மதித்து மோந்த்தே பாவோலோ {Mkhte Paolo) பான்னும் மடத்தில் அவரிருக்கும்படி நியமித்தார்.

அர்ச். அந்தோனியார் தம்மைக் குறித்து ஒன்றும் சொன்னவரல்ல. தமது உன்னத மாதிரியான சேசு நாதருடைய பாதத்தில் தம்மை முழுமையும் ஒப்புவித்து அவருடன் ஒன்றித்திருப்பதை மாத்திரமே தேடி வந்தார்.

அர்ச்சியசிஷ்டவர்களிடத்தில் இரண்டு வித்தியாசமான காரியங்களை நாம் கண்டறிய வேண்டியது அவசியம். நாம் கண்டு பாவிக்கவேண்டிய அவர்களுடைய புண்ணியங்கள், நாம் கண்டு ஆச்சரியப்படவேண்டிய அவர்களுடைய புதுமைகள், அர்ச். அந்தோனியாருடைய புதுமைகளை. அப்புதுமைகளைச் செய்யச் சர்வேசுரன் அவருக்குத் தந்தருளின வல்லபத்தைக் கண்டு நாம் ஆச்சரியப்படுவது மல்லாமல் முக்கியமாய் அவருடைய அரிய புண்ணியங்களை நம்மாலானமட்டும் கண்டுபாவிக்கப் பிரயாசைப்படுவோ மானால் அவருடைய ஒத்தாசையை அடைவோமென்பதில் கொஞ்சமாவது சந்தேகமில்லை.

செபம்

ஓ! சிறந்த புண்ணியங்களால் விளங்கி, மேன்மை பெற்றவரான அர்ச். அந்தோனியாரே, வேதசாக்ஷ முடி அடைவதற்காக அதியாசையோடு பக்திச் சுவாலகருகி கொப்பான அர்ச், பிரான்சிஸ்கு சபையில் உட்படத் தீர்மானித்தரே. தவத்தினுடையவும் ஒறுத்தலினுடையவும் ஆசையை எங்களுக்கு அடைந்தருளக் கிருபை புரியும் – ஆமென்.

நற்கிரியைஒருசந்தி அனுசரிப்பது.

மனவல்லயச் செபம் – விரும்பி வேதசாட்சியான அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

St. Antony Devotion (Day 2) in Tamil

இரண்டாம் நாள்

அர்ச். அந்தோனியாருடைய பிறப்பு

தவத்தினுடையவும் தாழ்ச்சியினுடையவும் உத்தம மாதிரியாயிருந்துவந்த இந்த மகா பெரிய அர்ச்சியசிஷ்டவர் லிஸ்போன் (Lisbonne)’ நகரத்தில் கோத்புரு தெ புய்யோன் (Godefroy a Bouillon) சந்ததியாருடைய அரண்மனையில் 1195-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி பிறந்தார். அவருடைய தாயாரான தெரேஸ் (Dota Theresa) துரைசாளி அஸ்தூரியா (Asturies} தேசத்து இராச குலத்திற் பிறந்தவள். அர்ச். தேவ மாதாவுக்குக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட லா சே (La $6) பட்டணத்து தேவாலயத்துக்கு மேற்புறத்தில் அவர் பிறந்த அரண்மனை கட்டப்பட்டிருந்தது.

Saint Antony of Paudua

ஞான மாடப்புறாவைப் போலக் கற்சந்துகளில் இல்லிடந் தேடி, அக்காலத்தில் காடாகவும் தனித்துமிருந்த பிரிவ் (Brive) பட்டணத்தையடுத்த கெபிகளில் (Grosses) வசிக்கப் பிரியங்கொண்டு, பாறையின் ஓரங்களினின்று துளித்துளியாய்க் கசிந்த நீரைச் செட்டா யுதவிக்கொள்ளத் தமது மிருதுவான கரங்களால் . பள்ளந் தோண்டினவர் ராஜ ஐசுவரியத்தினுடையவும் ஆடம்பரத்தினுடையவும் மத்தியில் பிறந்தார்,

பிறந்தவுடனே ஞானஸ்நானத்துக்குக் கொண்டு போகப்பட்டு அச்சமயத்தில் பெர்நாந்தோ {Frenano) என்னும் பெயர் சூட்டப்பட்டார், சிறு பிராயத்தின் பொழுதே உலக ஆஸ்திபாஸ்திகளையும் பெருமை சிலாக்கியங்களையும் காலில் மிதித்து பரலோகத்தையும் நித்தியத்தையும் நாடிச் சேர்ந்த பிறகு அவர் தண்ணீரைக்கொண்டு செய்தருளிய அற்புதங்களில் பிராதனமானவைகளின் குறிப்புகளைக் கல்விழைத்த தகடுகளிலெழுதி அத்தகடுகளால் அவர்  நானஸ்நானம் பெற்றவிடத்திலிருந்த தொட்டியை மூடினார்கள், அவருடைய தாயார் தெரேசாள் தன் கோத்திர மேன்மையினாலும், அழகினாலும் சிறந்திருந்தது போலவே புண்ணியத்தினாலும் சிறந்திருந்தாள். புண்ணியவதியான தாயுடைய பாலுடனும் கொஞ்சுதலுடனும் குழந்தைக்குப் புண்ணிய நடத்தை ஊட்டப்படுகிறதென்கிறார் சாஸ்திரியொருவர், தாயின் மடியிலேயே சேசு மரியெனவும், பிரிய தத்த மந்திரஞ் சொல்லவும் பெர்னாந்தோ கற்றுக்கொண்டார். ‘ஓ மகிமை பொருந்திய ஆண்டவளே” (Hymne 0 Gloriosa Domina.) என்னும் பாடலைக்கொண்டு அவருடைய தாயார் அவரைத் தாலாட்டினாள். சிறு பிள்ளைகள் அழுவதிலும் ஆடுவதிலும் ஓடுவதிலும் காலத்தைக் கடப்பது வழக்கமாயிருக்க, பெர்னாந்தோ என்பவர் செபம் செய்வதிலும், கோயில்களைச் சந்திப்பதிலும், தரித்திரருக்குத் தாராளமான பிச்சை கொடுப்பதிலும் பிரியங் கொண்டார். அர்ச். அந்தோனியாருக்குத் தோத்திரமான பாடலில் சொல்லப்பட்டிருப்பதாவது: “கிறிஸ்துவின் ஊழியரான அந்தோனியாரே, மனங் களிகூரும், உமது சிறு பிராயமுதலே உம்மை நிரப்பின ஆண்டவருடைய கருணையானது மோக்ஷ பாதையை நீர் நாடும்படி செய்தது’ என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ,

வாலிப ஸ்திரிகளே, வாலிபத் தாய்மாரே, சிறு பாலகர் உங்கள் கரங்களிலிருக்கையில் எவ்வளவோ ஆனந்த சந்தோஷமடைகிறீர்கள். உங்கள் பிள்ளைகள் மட்டில் உங்களுக்குண்டான ‘ கடமைகளை நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு முதலில் வேதத்தைப் படிப்பித்து மோக்ஷ வழி காட்ட வேண்டியவர்கள் நீங்களே, அந்த இளகலான மெழுகை உருவாக்குவதும், சேசுமரியென்னுந் திரு நாமங்களை அதில் பதியவைப்பதும் உங்களுடைய கடமையல்லவோ! உங்களிடத்தினின்றல்லவோ, உங்களுடைய மாதிரியைக் கண்டல்லவோ, குழந்தைகள் தங்கள் கரங்களைக் குவித்து செபிக்கவும், சிலுவையடையாளம் வரையவுங் கற்றுக் கொள்ளவேண்டியிருக்கிறது. உங்கள் குழந்தைகளைத் தேவமாதாவுக்கு ஒப்புக்கொடுத்து அவளுடைய ஆதரவில் வையுங்கள். ஞானஸ்நானம் பெற்ற முதலே அவர்களை அர்ச். அந்தோனியாருடைய அடைக்கலத்தில் ஒப்புவித்து விடுங்கள். சிறு குழந்தையான அந்தோனியாரைப்போல உங்கள் குழந்தைகளும் பிச்சைகொடுக்கும்படி பழக்குங்கள், பிற்காலத்தில் உங்கள் பிள்ளைகள் அவிசுவாசிகள் ஆகக் கூடும். நன்னெறியை விட்டுவிடக்கூடும். ஆனால் அரிசி, அந்தோனியாருடைய ஒத்தாசையால் தங்களுடைய சிறு பிராயத்தில் உங்கள் மடி மேல் வளர்ந்த காலத்தில் தாங்கள் கற்றுக்கொண்ட செபங்களை, கேட்ட புத்திமதிகளை, பார்த்த நன்மாதிரிகளை, தாங்களே செய்துவந்த தர்மங்களை நினைப்பார்கள், நல் வழி திரும்புவார்கள். நீங்கள் இவ்வுலகத்தில் அருமையாய் நேசித்த பிள்ளைகள் மறுவுலகத்திலும் உங்களோடு நித்தியத்துக்கும் வாழும் பாக்கியத்திற் சேர்வார்கள்.

*செபம்*

மகா மகிமை பொருந்திய அர்ச். அந்தோனியாரே, நீர் தேவமாதாவினுடைய ஆதரவிற் பிறந்து, உமக்கு ஐந்து பிராயமாகும் போதே உமது கற்பென்னும் ஒலிப் புஷ்பத்தை அத்திரு மாதாவுக்கு ஒப்புக்கொடுத்தவரே, கல்லிலே உமது விரலாற் பதிக்கப்பட்ட சிலுவையடையாளத்தைக் கொண்டு பசாசை துரத்தினீரே, அத்திரு மாதாவின் மட்டில் உருக்க மான பக்தியையும், நரக சத்துராதிகளின் தந்திரங்களை வெல்ல பலத்தையும் எங்களுக்கு அடைந்தருளும். ஆமென்.